Breaking News

றிஷாத் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்



அமைச்சர் றிஷாத் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய அரிசி மோசடி சம்பந்தமாக, பாரிய மோசடிகள்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தற்போழுது விசாரணைகளை மிகவும் நேர்த்தியாக ஆரம்பித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய அரிசி மோசடியில் அரசுக்கு பாரிய நாட்டம் ஏற்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சில் அரசி கொள்வனவு முறைகேடுகள் தொடர்பில் பாரிய மோசடிகள்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயேவிசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் றிஷாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த அமைச்சின் அதிகாரிகள் முன்னெடுக்கபடும் விசாரணைகளுக்கு பூரணஒத்துழைப்பை நல்குவார்களா என்பது சந்தேகமாகவுள்ளதாகவும், ஏனெனில் குறித்தவழக்கு தொடர்பான கோவைகள் அமைச்சர் றிஷாதின் பொறுப்பிலேயே தற்போதும் உள்ளதாகவும், அத்துடன் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்விடுக்கப்படலாம் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே எமது நாட்டில் நல்லாட்சியினை உறுதிப்படுத்துவதன் பொருட்டு முன்னெடுக்கப்படும் குறித்த விசாரணைகள் நிறைவுறும் வரை அமைச்சர் றிஷாத் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி குறித்த அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.