Breaking News

எழுக தமிழ் பேரணிக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு


'எழுக தமிழ் பேரணியில் அணி அணியாக திரண்டு வருமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது .

தாயகத்தின் சகல மாவட்டங்களிலிருந்தும் அரச அரசார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர், மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கலந்து கொள்ளுமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பேரணியில், அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை, எமது தாயக பிரதேசங்களை நாமே ஆளுவதற்கான உரிமையை வென்றெடுத்தல், வடக்கு கிழக்கிலிருந்து பாதுகாப்பு படையினரை வெளியேற்றுதல் ஆகியவற்றை சர்வதேச சமூகத்திற்கு உரத்து சொல்வதற்கும் தமிழ் மக்களே அணிதிரளுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை,'எழுக தமிழ்' பேரணிக்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள், நலன்புரி சங்கங்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்கி எமது உரிமைகளுக்கு உயிரூட்டும் வண்ணம் பேரணியில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.