Breaking News

முல்லைத்தீவு, பாலிநகர் இராணுவ முகாமை அகற்றுமாறு கோரிக்கை!



முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச, பாலிநகரில் இரண்டு பாடசாலைகளுக்கு எதிரே அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போதே மேற்படி அறிவித்தலை பாரளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டோர் ஏடுத்துரைத்துள்ளனர்.

தற்காலிகமாகவிருந்த இராணுவ முகாம் தற்போது பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாலிநகர் மகாவித்தியாலய அபிவிருத்தி குழு செயலாளர் மேலும் தெரிவித்ள்ளார் .

இந்ந நிலை தொடர்பாக அனைவராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டட நிலையில் பாடசாலைக்கு முன்பாகவுள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரியவர்களிடம் கையளிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.