Breaking News

தமிழீழ வீசா அங்கீகாரம் நீக்கப்படும் - டென்மார்க்



நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில், தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தமைக்கு சிறிலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள டென்மார்க், அந்தப் பட்டியலில் இருந்து தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

டென்மார்க் குடிவரவுத் திணைக்கள இணையத்தளத்தில், நுழைவிசைவுக்கான விண்ணப்பத்தில், எந்த நாட்டவர் என்ற தெரிவுப் பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதில் தமிழீழம் என்ற நாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக டென்மார்க் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வருமாறு ஸ்ரொக்ஹோமில் உள்ள, சிறிலங்கா தூதுவரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியது.

இதையடுத்து, அவர் டென்மார்க் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதன் பின்னரே, தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்து பட்டியலிட்டமைக்கு டென்மார்க் மன்னிப்புக் கோரியதாகவும், அந்தப் பட்டியலில் இருந்து, தமிழீழத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.