சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் சீனா விஜயம்
நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, ஸ்ரீலங்கா சுதந்திரக் சட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இவ்விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
சீனா அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.