பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க ஐயா இணக்கம்!!
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை – சேதவத்த எனும் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தலைவர்களும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதால், இவ்விடயம் குறித்த எவ்வித சர்ச்சைகளும் இல்லையெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.