Breaking News

'ஆவா' குழுவை​ உருவாக்கி இயக்குவது மஹிந்த! - வெளிவரும் உண்மை



யாழ்ப்பாணத்தில் ​மோட்டார் சைக்கிளில் சென்று வாள் வெட்டு நடத்தும் ஆவா குழு மஹிந்த ஆட்சி காலத்தில் யாழ் கட்ட​ளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவினால் உருவாக்கப்பட்டு இரகசி யமாக வழிநடத்திச் செல்லப்படும் ஒன்று என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் . ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

யாழ்ப்பாண பல்க​லைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து முன்னெடுக்கப்படும் விசாரணையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

யுத்தம் முடிந்த பின் ஆவா போன்ற இன்னும் பல குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் இந்நிலையில் இது குறித்து வௌியில் தகவல்விட வேண்டாம் என மேலிடத்தில் பணிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குழு மஹிந்த அரசாங்கத்தின் போது பிரபலமான இராணுவ அதிகாரி ஒருவின் நெறிப்படுத்தலின் கீழ் இயங்குவதாகஇ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதுஇ இந்த குழு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மிகவும் நுட்பமாக கட்டியெழுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் எந்தவொரு தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என பொலிஸாருக்கு மேலிடத்திலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராணுவத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவிய போதுஇ போர் ஓய்வின் பின்னர் ஆவா குழு போன்ற பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

தென் இந்திய திரைப்படங்களின் அனுபவம் பெற்றுக் கொண்டு இளைஞர் குழுக்கள் வாள்களை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவ்வாறான குழுவொன்றின் உறுப்பினர்கள் இருவர்இ கொக்குவில் பொலிஸ் பிரிவில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்தே இவ்வாறான குழுக்கள் யாழில் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக கூறிய அந்த அதிகாரி எனினும் விடுதலை புலிகள் பலமாக காணப்பட்ட காலப்பகுதிகளில் அவ்வாறான குழுக்களை காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வாள்வெட்டு கும்பலான ஆவா குழு என்று கருதியே மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எப்படியிருப்பினும் அதிகமான இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வடக்கில் உள்ள நிலையில் இவ்வாறான குழுக்கள் செயற்படுவது சந்தேகத்திற்குரிய ஒரு விடயாகும் என வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பயிற்சி பெறாத பொலிஸார் அதிகார வரம்பை மீறி இத்துப்பாக்கிச் சூட்டை​ மேற்கொண்டுள்ளதாக விசார​ணையில் தெரியவந்துள்ளது. மேலும் பொலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய பின் கீ​ழே விழுந்து  தலையில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.