யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மூக்குடைப்பட்டார் வடக்கு ஆளுநர்.!!
அண்மையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி பல்கலைக்கழக சமூகத்தினரால் யாழ்.கச்சேரிக்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தின் இறுதியில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் மகஜர் ஒன்று மாணவர் ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டது.
தற்போது அதற்கான பதிலை வடக்கு ஆளுநர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பதில் தனி சிங்கள மொழியில் எழுதப்பட்டிருப்பதால் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்துள்ளார்











