Breaking News

‘கோத்தாவின் போர்’: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

தாம் எதிர்பார்த்தது போன்று கோத்தாவின் போர் நூல் பிரபலமடையவில்லை என்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


“உலகில் போர்க்கால நிகழ்வுகள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள் பல பிரபலமடைந்துள்ளன.

அவற்றைப் போன்றுஎமது நாட்டிலும் பிரபலமடையும் என்று எதிர்பார்த்தே, கோத்தாவின் போர் என்ற நூலும் வெளியிடப்பட்டது.

ஆனால் துரதிஷ்ட வசமாக அந்த நூல் பிரபலமடையவில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் போர் என்ற நூலை சந்திரபிரேம என்ற ஊடகவியலாளர் மூலம் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.