Breaking News

புலிகள் மீண்டும் தலை தூக்கி வருகிறார்கள் என்பதாலா மாணவர்கள் சுடப்பட்டனர்?

வடக்கில் எதிர்ப்புகள் ஆரம்பிக்கப்படுமாயின் அதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரதெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் அண்மையில்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு குற்றச் செயல். முழு மனித உரிமை அமைப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல். இது குறித்து அரசாங்கம் சரியான முறையில் செயற்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டுக்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி வருகிறார்கள் என்ற அச்சத்தின் காரணமாக பொலிஸார் தமது எல்லையை மீறி இப்படி செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

வடக்கில் எதிர்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டால் அரசாங்கமும் பொலிஸாரும் அதற்குபொறுப்புக் கூறவேண்டும். விசேடமாக வடக்கில் இளைஞர்கள் பொலிஸார் மீதுஎதிர்ப்பான மனநிலையில் உள்ளனர் என்றால் அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் மட்டுமே பிரச்சினையை தீர்க்க முடியும். எதிர்ப்புகளுக்குபதிலடியாக செயற்பட்டால் பொலிஸாருடனான முரண்பாடுகளே அதிகரிக்கும்.

இந்த பயங்கரமான நிலைமை மாற்ற அரசாங்கம் தனக்கிருக்கும் பொறுப்பைஉடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.