பிரதி அவைத்தலைவர் விவகாரம்: வட மாகாண சபையில் அமளி
பிரதி அவைத் தலைவர் நியமனம் தொடர்பாக, வட மாகாண சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டு ள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இடம்பெற்று வருகின்றது.
வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக பதவி வகித்து வந்த அண்டனி ஜெகநாதன் கடந்த மாதம் மரணமாகியுள்ள நிலையில், குறித்த பதவிக்கு பிறிதொருவரை நியமிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.
எனினும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளதால் தாம் மீளவரும்வரை குறித்த நியமனத்தை பிற்போடுமாறு மாகாண சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், குறித்த கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் எதிராக ஒரு குழுவினரும் செயற்படுவதால், இரு குழுக்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








