தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு...!! உறுதிப்படுத்தினார் வினோ
தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக பலம் பெறவேண்டும் என்பதற்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியிருந்ததாக தெரிவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் எனினும் அந்தகூட்டமைப்பிற்குள் தற்போது கடும் முரண்பாடுகள் நிலவுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
ஒரு அணியாக இணைந்து செய்றபட முடியாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் எவ்வாறு தமிழ்மக்களின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை உட்பட ஏனைய பிராதன பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க போகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் வினோநோகராதலிங்கம் குறிப்பிட்டுள்ளர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்திய காரியாலயம் முல்லைத்தீவு விசுவமடுவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரியான பாதையிலிருந்து விலகி செல்கின்றோம் என்பதையும் அல்லது தமிழ்த்தேசியத்திலிருந்து விலகிச்செல்கின்றோம் என்கின்ற குற்றச்சாட்டுக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இன்று உட்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இருதாலும் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் இட்ட ஆணையின் பிரகாரம் நாங்கள் எங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் கூறியள்ளார்.
இதேவேளை தமிழத்தேசிய கூட்டமைப்பு சட்ட ரீதியாக பதிவு செய்யப்படவில்லை. இதைதவிர கட்சிகளுக்குள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறு இருக்கின்றபோது தமிழ் மக்களின் அரசியல் ரீதியான அல்லது உரிமைகளை எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள போகின்றது என மக்கள் மத்தயில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இவ்வாறான அலுவலகங்களை திறந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து மக்களுக்கு சிறிய உதவியை என்றாலும் வழங்க முடியும் என்ற நம்பிக்கையின் மூலம் தான் இந்த அலுவலகத்தை திறந்துள்ளதாகவும் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.