நம்பிக்கையை சிதைத்துள்ள வடக்கு அசம்பாவிதங்கள்
நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டுமாயின் நாட்டில் அமைதியையும் சமாதானத்தை யும் பலப்படுத்துவதுடன் அரச நிறுவனங்களை சரியாக வழிநடத்த வேண்டும். தற்போது அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகப் பிரச்சினைகளே குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார்.
வடக்கில் நடந்த சம்பவங்கள் மூலம் நாட்டின் அரச, சுயாதீன திணைக்களங்கள் மீதான நம்பிக்கை சிதைவடைந்துள்ளது. ஆகவே உடனடியாக அரசியல் நகர்வுகளில் மாற்றம் வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு மேல் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் பாரிய அளவில் பலவீனம்
அடைந்து வருகின்றன. அதபோல் மக்களுக்கும் அரச திணைக்களங்கள் மீது உள்ள நம்பிக்கை வீழ்ச்சிகண்டு வந்துள்ளது. அரச நிருவாக செயற்திறனை பலவீனப்படுத்த இடமளிக்கக் கூடாது. எனினும் தற்போது அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிருவாகப் பிரச்சினையே இந்த குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது இன்று அரச நிறுவனங்களில் என்ன நடந்து வருகின்றது, அரச நிறுவனங்கள் வீழ்ச்சி காண என்ன காரணங்கள் அடிப்படியாக அமைந்துள்ளது. தோல்வியுற்ற அரசியல்வாதிகளை அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்து விடுகின்றனர். அவர்களுக்கு அனுபவமோ அல்லது தெளிவான சிந்தனையோ இல்லை. இவற்றை தவிருதுக்கொள்ள வேண்டும்.
நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் அரச நிறுவனங்களை சரியாக வழிநடத்த வேண்டும். பொருளாதரத்தை வளப்படுத்த வேண்டுமாயின் நாட்டில் அமைதியும் சமாதானத்தையும் பலப்படுத்த வேண்டும். ஆனால் இன்று நாட்டில் நடக்கும் மோசமான நிலைமைகள் நாட்டின் அமைதியை சீரளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வடக்கில் நடந்த சம்பவங்கள் மூலம் நாட்டின் அரச சுயாதீன நிறுவனங்கள் மீதான நம்பிக்கை சிதைவடைந்துள்ளது. குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வடக்கில் நடந்த சம்பவத்தை நாம் முழுமையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக் கூடாது.
2009ஆம் ஆண்டு அணைந்த துவக்குகள் மீண்டும் சீரிப்பாய்ந்தது அன்றைய தினம் என யாழ் பல்கலைக்கழக விவுரையாளர் ஒருவர் தெரிவித்தார். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே பொலிஸ் இவ்வாறு மோசமாக செயற்பட்டதற்கு பொலிஸ் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும். இதை ஒரு சம்பவமாக கருதி விட்டுவிட முடியாது. ஆகவே பொலிஸ் திணைக்களம் மீள் நிர்மாணிக்கப்பட வேண்டும். பொலிஸாரின் மனநிலை தொடர்பிலும் சிவில் மக்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் கற்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே பொலிஸ் திணைக்களம் இன்னும் கவனமாக செயற்பட வேண்டும்.
அதபோல் அண்மையில் புலனாய்வு பிரிவின் 200இற்கும் அதிகமான முன்னாள் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இது மிகவும் மோசமான ஒரு சம்பவமாகும். இதை தான் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். ஆகவே இவற்றை சரியான திசைக்கு திருப்ப வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் பொலிஸ் திணைகளத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை போய்விடும். வடக்கில் போலவே கொழும்பிலும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றன. ஆயுத கலாசாரம் பரவி வரும் நிலையில் அவற்றை நிறுத்த வேண்டும். அதற்கான சரியான செயத்திட்டம் கையாளப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு என்ற ஒரு கொள்ளையும் செயற்திட்டமும் அவசியமாகும்.
மேலும் தற்போது புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. உப குழுக்களின் அறிக்கைகள் தற்போது விவாதத்திற்கு விடப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று வரையில் அரசின் தன்மைகள் தொடர்பில் எந்தவித விவாதமும் முன்னெடுக்கப்படவில்லை. அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்றும் சட்டம் எவ்வாறு கையாளப்பட போகின்றது,
ஐக்கியம் என்பதன் தன்மைகள் தொடர்பில் விவாதம் ஒன்றுகூட இன்றுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் 1972ஆம் ஆண்டு அரசின் தன்மைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி உள்ளது. ஆகவ இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கமாக நாம் சரியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு மேல் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்றார். .








