சர்வாதிகார அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவராதீர்-சுஜீவ
எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மீண்டும் சர்வாதிகார சக்தியொன்றை கொண்டு வரமுன்வர வேண்டாம் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய வங்கியில் அர்ஜுன மஹேந்திரனை நியமிக்கும் போதே, அவருடை மருமகனுடைய நிறுவனமொன்றுடன் தொடர்பு இருப்பதை நாம் தெரிந்துகொண்டோம். தவறு இடம்பெறுவதற்கான சூழல் இருப்பதனை நாம் சுட்டிக்காட்னோம். இது எமக்கு ஒரு நல்ல பாடம். குடும்பத்தவர்களை பதவிகளில் அமர்த்திக் கொண்டால் இவ்வாறுதான் நடைபெறும்.
நாம் ஊடகங்களை நேசிக்கின்றோம். நீங்கள் எமக்கு அடித்து உங்களுக்குள்ள சுதந்திரத்தை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம். சர்வாதிகார அரசாங்கம் ஒன்றை மீண்டும் இந்நாட்டில் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.








