டிப்ளோமா பட்டதாரிகள் 3225 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற 3225 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இவர்களில் 1466 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர்.
அத்துடன், சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் பட்டம் பெற்ற டிப்ளோமா பட்டதாரிகள் 2211 பேர் இவர்களில் உள்ளனர். இதில் 1014 பேர் தமிழ் மூலமான பட்டதாரிகள்.
இன்று ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்களில், மத்திய மாகாண பாடசாலைகளுக்காக 375 பேரும், வட மாகாணத்திற்கு 241 ஆசிரியர்களும், 229 பேர் வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு 192 பேரும், வட மேல் மாகாணத்திற்கு 184 பேரும், தெற்கு, ஊவா மற்றும் மேல் ஆகிய மாகாணங்களுக்கு முறையே 154, 109, 83 பேர்கள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.