அலெப்போ நகரை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் சிரியா அரசு படைகள் தீவிரம்
அலெப்போ நகரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் போரில் ரஷ்யா ஆதரவு பெற்ற சிரியா அரசு படையினர் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகமானது, போராளிகள் வசமுள்ள முன்னரங்க பகுதிகளில் இரவில் டஜன்கணக்கான வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையானது, அரசு ஆதரவு பெற்ற படையினருக்கு பெரிதும் உதவி செய்து அலெப்போவின் வடக்கு பகுதியில் முன்னேற காரணமாக இருந்தது
அலெப்போவிலிருந்து போராளிகள் பத்திரமாக வெளியேற பாதுகாப்பான பாதை அமைத்து தரப்படும் என்று போராளிகளுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை ராணுவம் வெளியிட்டிருந்தது. ஆனால், போராளிகள் அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.