பெரிய வர்த்தக நஷ்டத்தை காட்டி டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப், அவருடைய பெரிய வர்த்தகங்களில் ஏற்பட்ட நஷ்டங்களை வரி செலுத்தாமல் இருக்க பயன்படுத்தினாரா என்பது பற்றி கூறுவதற்கு, டிரம்பின் பரப்புரை மேலாளர்கள் மறுத்துவிட்டனர்.
1995 ஆம் ஆண்டு 900 மில்லியன் டாலர் நஷ்டத்தை டிரம்ப் அறிவித்திருப்பது கிட்டதட்ட 18 ஆண்டுகள் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கு அவருக்கு உதவியிருக்கலாம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
டிரம்பின் நிறுவனத்திலிருந்து யரோ ஒருவர் பெயர் குறிப்பிடப்படாத மின்னஞ்சல் ஒன்றில் டிரம்பின் வரி விபரங்களை அடங்கிய மூன்று பக்கங்களை கடந்த மாதம் தனக்கு அனுப்பியிருப்பதாக இந்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர் சுசேன் க்ரெய்க் கூறியிருக்கிறார்.
தன்னுடைய வரி செலுத்திய விபரங்களை பொதுவெளியில் வெளியிட டிரம்ப் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.