யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வடமாகாண சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று காலை 9.30 அளவில் யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள வடமாகாண கட்டிடத்தில் கூடியது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார்.
இதன்போது சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்திருந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது








