சம்பந்தன், விக்னேஸ்வரனைக் கொல்ல ரூ.25 கோடி உடன்பாட்டுடன் சதி..!!
நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக வெளிப்படுத்திய பெரும்பான்மையினத்தை சேர்ந்த நபருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தமிழருக்கு உதவி செய்யும் துரோகி எனவும் தம்மை கடுமையாக அச்சுறுத்தி வருவதாகவும் குறித்த நபர் வடமாகாண முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முத லமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் அவரிடம் சர்வதேச ஊடகம் ஒன்று வினவியிருந்தது. அக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு முதலைமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எனக்கு சிங்கள மொழியில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதன் மொழிபெயர்பை பெறுவதில் சிறு தாமதம் ஏற்பட்டது. ஆனால் எழுக தமிழ் பேரணி நடைபெற்று சில தினங்களுக்கு பின்னர் மேற்குறித்த மின்னஞ்சல் அனுப்பிய நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தனது முழு விபரங்களையும் குறிப்பிட்டு, தான் ஒரு கடிதம் அனுப்பியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனையும் உங்களையும் (என்னையும்) கொல்லுவதற்கு 25 கோடி தருவதாக உடன்பாடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீங்கள் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கு எந்த நேரத்தில் எவ்வறான ஆபத்து வரும் என தெரியாது எனவும் இது போன்ற விடயம் தொடர்பாக சம்பந்தனுக்கும் கடதம் அனுப்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
குறித்த நபர் தெரிவித்த விடயத்தையும் அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதியையும் எனது முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியதுடன் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கும் கொடுத்தேன்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்குறித்த நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அதில் தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அச்சுறுத்துவதாகவும் சிங்களவனக இருந்து கொண்டு தமிழருக்கு உதவி செய்யும் துரோகி நீ என கடுமையாக பயமுறுத்துகிறார்கள் அதற்கு நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தார். குறித்த நபர் தெரிவித்த கருத்துக்களையும் உடனடியாக பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளேன். இது தொடர்பில் ஜனாதிபதியிட் இருந்து பதில் எதுவும் வரவில்லை பொலிஸ்மா அதிபர் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என எதிர்பார்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.








