Breaking News

இலங்கையில் நாம் உண்மையாய் ஆடவில்லை – ஆஸி பந்துவீச்சாளர் நாதன்

இலங்கையில் அவுஸ்திரேலிய அணி உண்மையான ஆட்டத்தை ஆடவில்லை, அதனால் தான் டெஸ்ட் தொடரை ஆஸி அணியினரான நாம் இழந்துவிட்டோம் என்று அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த 3 போட்டிகளிலும் தோற்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் அவுஸ்திரேலிய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இலங்கையில் நாங்கள் உண்மையான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவில்லை என்று அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஆமாம், அது ஒரு கடினமான சுற்றுப்பயணமாக இருந்தது. இலங்கை வீரர்கள் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டனர்.

உண்மையில் எங்களை விட அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதே சமயம் நானும் சிலவற்றை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். நாங்கள் சரியாக ஆடவில்லை, அதனால் விமர்சனங்களுக்கு தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார்.