பிரபாகரனின் சடலமா..! போலிக் கதை : - (காணொளி இணைப்பு)
கேள்வி : முப்படைகளின் தளபதி என்ற வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்டீர்களா?
பதில் : நான் கனவில் கூட காணவில்லை. அது போலியான கதை. அவ்வாறானதொரு மனநிலையில் நான் இல்லை. சடலங்களை கண்டு மகிழ்பவன் நான் இல்லை. பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் என்று எனக்கு வேறுபாடு இல்லை. நாம் நபர்களுடன் போரிட வில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராகவே போரிட்டோம். எனவே அது போலியான கதையாகும்.
கேள்வி : இறுதிப்போரின் பின்னர் 12 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து உங்களது அரசாங்கத்தினால் சமூகமயமாக்கப்பட்டது. ஆனால் அரசியல் கைதிகளை விடுவிக்க தற்போது நீங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றீர்கள்.
பதில் : ஆம் மிக விரைவாக அவர்களை விடுவித்தோம். ஆனால் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எமது ஆட்சிக் காலத்தில் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு அளிக்க நாம் தயாராகுகையில் தற்போது குரல் எழுப்பும் சில சட்டத்தரணிகள் அன்று இவர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்துமாறு குரல் கொடுத்தனர். அந்த வழக்குகளுக்கு அமைவாக நாங்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தினோம். இல்லை என்றால் அவர்களை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பியிருப்போம்.
நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டத்தரணிகள் அன்று கோரிக்கை விடுத்தனர். அரசியல் களத்தில் இருந்து தான் அந்த கோரிக்கை வந்தது. எனவே நீதிமன்றில் குற்றச்சாட்டு காணப்படுகின்றமையினால் எமக்கு பேச முடியாது. இல்லை என்றால் அவர்களுக்கு அன்றே செல்ல முடிந்திருக்கும். அதனை விட குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் புனர்வாழ்வு பெற்றனரா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சென்றனர். அது எமக்கு பிரச்சினை இல்லை.
கேள்வி : அவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்களா?
பதில் : தற்போது குற்றவியல் குற்றச்சாட்டுகளே அவர்களுக்கு காணப்படுகின்றன. அரசியல் குற்றச்சாட்டுகள் இல்லை. எனவே குற்றவியல் குற்றச்சாட்டுகள் அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதற்கு வித்தியாசம் உள்ளது. ஒருவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் அவர்களுக்கு அதனடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க முடியும்.
நீதிமன்றில் அந்த விடயம் காணப்படுகின்றது. நீதிமன்ற விடயங்களில் அரசாங்கம் தலையிட்டால் அது தவறாகும். எனவே அரசியல் விடயமாகவும் தலையீடு செய்ய கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். நீதிமன்றில் அந்த விடயம் காணப்படுகின்றது. ஆகவே அது தற்போது எமது விடயமல்ல. நாம் கூறுவதை தற்போதைய அரசாங்கம் கேட்கின்றதா? நாங்கள் கூறுவதையே செய்கின்றதா? இல்லை.
நாமல் சிறைக்கு சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்து ஏன் அவர்களை விடுவிக்க முடியவில்லை என என்னிடம் கேட்டார். நீதிமன்றில் உள்ள வழக்கு என்றே நான் அவருக்கு கூறினேன். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியும் வழக்கை விலக்கிக் கொள்வதற்கு. இல்லை என்றால் துரிதப்படுத்தவும் முடியும். சாட்சிகள் காணப்படுமாயின் அவற்றை விசாரிக்க முடியும். இவர்களை விடுவிக்கக் கோரும் அதே சமயம் மறுபுறம் சிலரை உள்ளே எடுக்கின்றனர்.
கேள்வி : வடக்கு மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளவும் வடக்கு தெற்கு இணைப்பை கட்டியெழுப்ப உங்களால் முடியாமல் போனதாக குற்றம் சாட்டுகின்றனர். அதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
பதில் : உண்மையாகவே போரை வெற்றி கொண்டதன் பின்னர் அதில் அரசியல் செய்திருக்க முடியும். அரசியல் செய்திருந்தால். உள்ளத்தை வெற்றி கொள்வது குறித்து பேசி, அவர்களை முகாம்களில் வைத்துக் கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் நாங்கள் என்ன செய்தோம்? எனக்கு பாரிய பொறுப்பு காணப்பட்டது.
வடக்கின் பொருளாதாரம் வீழ்ச்சி. ஏனைய பகுதிகளின் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் கிடைக்கப்பெற வேண்டும். மிதி வெடிகளால் விவசாய நிலங்கள் அனைத்தும் பாழடைந்து காணப்பட்டன. எனவே முதலில் மிதி வெடிகளை அகற்றினோம். அடுத்ததாக முகாம்களில் இருந்தவர்களை குடியமர்த்தினோம்.
இதன் போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினோம். மின்சாரம், வீடு, நீர், வீதி போன்ற வசதிகளை முதலில் வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு பாடசாலைகள் இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு வைத்தியசாலைகள் காணப்பட வேண்டும். யாழ் குடாவை சென்று பாருங்கள். வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், முழு வடக்கிற்கும் 29 மஹிந்தோதய ஆய்வுகூடங்கள், அனைத்தையும் வழங்கினோம். ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக வடக்கிற்கு வழங்கினோம். காரைநகருக்கு சென்று மஹிந்தோதய ஆய்வுநிலையை நான் திறந்து வைத்தேன். இந்த தேவைகளை வழங்கினோம்.
நான் யாழுக்கு சென்று புகையிரத சேவையை திறந்து வைத்தேன். யாழ்தேவி யாழுக்கு சென்றது. அந்த வசதிகளை வழங்கினோம். கடுகதி பாதையை ஆரம்பித்தோம். அதனை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டது. ஆனால் வீதிகள் அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின்னர் எந்த வீதியாவது கார்பட் போடப்பட்டதா? என்று கூறுங்கள் பார்ப்போம். ஒரு வீதியையாவது அமைத்தார்களா? இவற்றை நான் செய்தேன். மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் எதனை செய்தாலும் பலனில்லை. வயிற்றுப்பசியில் இருப்பவர்களுக்கு போதனை செய்வதில் என்ன பலன். எனவே அவர்களின் வயிற்றுப்பசியை முதலில் தேற்ற வேண்டும். அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மின்சாரம் இல்லாமல் இருளில் பிள்ளைகளுக்கு ஒன்றும் கூறி வேலையில்லை. எனவே தான் நாங்கள் அடிப்படை விடயங்களை முன்னெடுத்தோம். ஆனால் அரசியல் ரீதியான ஒரு கலந்துரையாடலுக்கு நாங்கள் செல்ல வில்லை. நான் அரசியல் தலைவர். ஏனையவர்களுக்கு அங்கு சென்று செயற்பட்டிருக்க முடியும். அது எமது பக்க தவறு.
ஆனால் தற்போதைய அரசாங்கம் என்ன செய்துள்ளது. அனைத்தையும் அரசியல்மயமாக்குகின்றது. இராணுவத்தை அகற்றுகின்றது. எந்தளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது. ஆனால் இடம்பெயர் முகாம் ஒன்றையாவது மூடியுள்ளதா என்று கூறுங்கள் பார்க்கலாம். ஏதாவது ஒன்றை கூறுங்கள். இந்த இடத்தில் இருந்த முகாமை மூடி விட்டு மக்களை குடியமர்த்தினோம் என்று கூறட்டும் பார்க்கலாம். என்னை விட உங்களுக்கு யாழ்ப்பாணம் தொடர்பாக தெரியும் தானே. நீங்கள் கூறுங்கள். நான் தோல்விக்கு பின்னர் செல்லவே இல்லை. ஆனால் அங்கு என்ன நடக்கின்றது என்பது எனக்கு தெரியும். ஒன்றை கூட மூடவில்லை. அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லை என்பதே இதிலிருந்து வெளிப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரை சந்தோஷப்படுத்துகின்றது. தமிழ் மக்களுக்கு என்ன நடந்துள்ளது? ஒன்றும் இல்லை. மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்பதை நான் அச்சமின்றி கூறுவேன். நான் நிர்மாணித்தவையை திறந்து வைக்கின்றனர். வைத்தியசாலை மற்றும் பொறியியற்பீடம் அனைத்தையும் நான் நிர்மாணித்தேன். மின்சாரம். நான் நிர்மாணித்தவையை அவர்கள் திறந்து வைக்கின்றனர்.
கேள்வி : வடமாகாண முதலமைச்சரின் கருத்து மற்றும் வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியவர் என்ற வகையில் கவலையடைகின்றீர்களா?
பதில் : ஒரு போதும் இல்லை. பைத்தியமா? நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அந்த மக்களின் உரிமை அது. தேர்தலை நடத்த வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள். தோல்வியை அறியாமல் நான் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் தேர்தலை நடத்தினேன். மக்களுக்கு ஆட்சி நிருவாகம் தொடர்பில் அறிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக தேர்தலை நடத்தினேன். முதலமைச்சரை இனவாதி என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அரசியல் செய்கின்றார். இது தெளிவாகவே காணப்படுகின்றது. அரசாங்கத்திற்கு புரியவைக்க அவருக்கு முடியவில்லை. ஒன்றும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதா? பிள்ளைகளுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளதா? வீதி ஒன்றாவது அமைத்துள்ளதா? இடம்பெயர் முகாமை மூடினார்களா? மீள் குடியமர்த்தினார்களா?
மீனவர்களுக்கு மீன்களை பிடிக்க அனுமதிக்கவில்லை. பிடித்து கொண்டு செல்கின்றனர். நிவாரணம் உள்ளதா? இல்லை. கடற்படை இன்னும் 3 கடல் மைல் தூரம் பின்னோக்கி வந்துள்ளது. அந்த பகுதியிலும் மீன்களை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். மீனவர்களுக்கு என்ன செய்கின்றீர்கள். 30 ஆண்டு காலமாக கடற்றொழில் ஈடுபட முடியாமல் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை நாங்கள் வழங்கினோம். அதனை தற்போது இல்லாமலாக்கியுள்ளனர்.
இவற்றுக்கு முதலமைச்சரால் தீர்வை தேட முடியவில்லை. அரசாங்கத்திற்கும் முடியவில்லை. எனவே இனவாதத்தை பேசி பிரச்சினையை திசை திருப்புகின்றனர். மக்களுக்கு பிரச்சினைகள் மறந்து விடுகின்றது. பொருட்களின் விலை அதிகம். விவசாயிகளுக்கு உற்பத்திகளை விற்பனை செய்துக் கொள்ள முடியவில்லை. பெரிய வெங்காயம் உற்பத்தி பாதிப்பு, இவை தான் யாழ்ப்பாணத்தில் காணப்படும் உண்மை நிலை. சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முடியாமல் திசை திருப்புகின்றனர். அதனை தான் முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து செய்தார்.
ஆனால் அந்த உரிமை அவர்களுக்கு உள்ளது. அது எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவ்வாறான கருத்துக்கள் மிகவும் ஆபத்தானது. இதனால் இனங்கள் பிளவுபடும். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சரை இனவாதியாக கூற முடியாது.
கேள்வி : உங்களது ஆட்சிக் காலத்தில் இல்லாத சுதந்திரம் தற்போது காணப்படுவதாலேயே விக்னேஸ்வரன் போன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக நிலைப்பாடு உள்ளது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு நீங்கள் சந்தர்ப்பம் அளிப்பீர்களா? அந்த கோரிக்கைகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : நாட்டில் சட்டம் ஒன்றாக இருக்க வேண்டும். இனவாதத்தை தூண்டுவது சரி என்றால் நாட்டின் சட்டம் அது என்றால் சரி. ஏனையவர்களுக்கும் சுதந்திரம் உள்ளது. அவர்களது இனவாதத்தை தூண்டுவதற்கு. அப்படி இல்லை என்றால் அது முழுமையாக தவறாகும். எனது காலத்தில் அது இனவாதமாக வந்திருந்தால் முடியாது என்று கூறியிருப்பேன். உண்மை. தவறாக நினைக்க வேண்டாம். இனவாதத்திற்காக மக்கள் அங்கு வரவில்லை.
நான் முன்பு கூறியவை அங்கு இல்லை. நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக விவசாயி வந்தார். கடற்றொழிலில் ஈடுபட முடியவில்லை மீனவர்கள் வந்தனர். இளைஞர்களுக்கு தொழில் இல்லை அவர்களும் வந்தனர். பட்டதாரிகளுக்கு இன்று தொழில் இல்லை. அரச ஊழியர்களுக்கு வாழ்வாதார பிரச்சினை அவர்களும் வந்தனர். எனவே இனவாதமாக வரவில்லை. தெற்கிலும் அதே நிலை தான். தெற்கின் பிரச்சினைகள் வடக்கிலும் தாக்கம் செலுத்தும். வடக்கு மக்களுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்படவில்லை.
பகுதி -1