“இலங்கை அரசியல் யாப்பு” வெளியீட்டு நிகழ்வில் நடந்தது என்ன?
புவிசார் அரசியலின் கைதிகளாய் உள்ள ஈழத்தமிழர்
பற்றிய திறந்த உரையாடலும் மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசின் “இலங்கை அரசியல் யாப்பு (1931-2016)” நூல் வெளியீடும் அரங்காய்வும் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றவுள்ளது.
இந் நிகழ்வில் தலைமையுரையினை பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம, வரவேற்புரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க. அருந்தாகரன், நூலாய்வினை சிரேஸ்ட ஊடகவியலாளர் வ.தேவராஜா சிறப்புரையினை எழுத்தாளர் நிலாந்தன் ஆகியோர் வழங்கினர்.
மேலும் சிறப்புரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரும் பிரதம விருந்தினர் உரையை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் வழங்க இருந்தார் எனினும் முதல்வர் சில காரணங்களினால் வரமுடியாது போகவே அவருடைய உரையை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வாசித்து வைத்தார்.
கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மென்வலு பற்றிபாடம் எடுத்தார் சுமந்திரன்!
இன்றைய தினம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற “இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் வெளீயீட்டு விழாவிலேயே சுமந்திரன் மென்வலு பற்றி மக்களுக்கு பாடம் படிப்பித்தார்.
தவராசா நூல் பற்றி உரையாற்றும் போது மாகாணசபை தன்னுடைய வேலையை சரிவர செய்யவில்லை என்று கூறினார். இதனால் கொதித்தெழுந்த மக்கள் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவை ஏசத்தொடங்கினார்கள். “நீங்கள் செய்த அட்டுளீயங்கள் கொஞ்சம் நஞ்சமா? எத்தினை பிள்ளைகள சாக்கொண்டனிங்க? மகிந்தாவோட சேந்து என்ன எல்லாம் பன்னிங்க” “எழுக தமிழ் பேரணியை குழப்பினிங்க நீங்க எல்லாம் மனிசரா” என பல கேள்விகளை எழுப்பினர்.
மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லமுடியாது தின்டாடிய வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கூறுகையில் “நாங்கள் செய்தது தவறு தான்” என ஒத்துக்கொண்டார்.
மேலும் சுமந்திரன் தனது பங்கிற்கு உரையாற்றும்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் எழுக தமிழ் பேரணியையும் தாக்கி குறிப்பிட்டார். குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.
இதனால் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டது. சுமந்திரனை பொதுமக்கள் “அரசாங்கத்துடன் நீ சேந்து செய்கிறது கொஞ்சநஞ்சமா” “உடுவில்ல அவ்வளவு பிள்ளைகள் அடிவாங்கக்காரணம் நீதான்” போன்று பலவாறு பொதுமக்கள் பேசினர்.
பொதுமக்கள் பேசும் போது சுமந்திரன் மென்வலு பற்றி பாடம் எடுத்தார். மென்வலு பற்றி சுமந்திரன் பின்வருமாறு பாடம் எடுத்தார் “மென்வலுவானது அமெரிக்காவில் ஆரம்பமாகியது. இது எமது மக்களுக்கு புதியவிடையம்” என்றெல்லாம் பாடம் கற்றுக் கொடுத்தார். இதனால் மக்கள் கொதித்தெழுந்தனர். சுமந்திரன் கடும்தொனியில் பொதூமக்களை அமருமாறு வெருட்டினார்.
சுமந்திரனை கேள்வி கேட்ட பொதுமக்களை சுமந்திரனின் மெய்ப்பாதுகாவலர் கடும் வார்தைகளால் திட்டினார். இதனால் வாக்குவாதம் முற்றியது. பின் அங்கிருந்த பெரியவர்களால் தீர்துவைக்கப்பட்டது.
பின்னர் சுமந்திரன் தனது உரையை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்தார். பின்னர் கஜேந்திரகுமார் அவர்கள் தன்னையும் தன் கட்சியினையும் விமர்சித்த சுமந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக உரையாற்றினார். சுமார் 20 மணிநேரப் பேச்சு அரங்கம் கைதட்டல்களில் அதிர்ந்தது. சுமந்திரன் அரங்கில் சிரித்தவாறே இருந்தார்.
பின்னர் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனை தாக்கி தனது கருத்துக்களை வெளியிட நூல் வெளியீட்டின் இடைநடுவில் சுமந்திரன் எழுந்து சென்றார்.
மக்களுக்கும் அவருடன் முறுகல் நிலையில் வாக்குவாதத்துடன் அவரின் வாகனம்வரை சென்றனர். அவரை பாதுகாப்பாக வழியனுப்புவதற்கு நூல் வெளியீட்டுக்கு வராத வடமாகாண சபை உறுப்பினர்கள் கேசவன் சயந்தன் ஆனால்ட் ஆகியோர் திடிரென விரைந்து வந்தனர். இதனால் முறுகல் நிலைதவிர்கப்பட்டது.
-துளியம்-