Breaking News

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாணவன் முதலிடம்!

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் வடக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.