Breaking News

ஆவாக்குழுவை தேடி மூன்று காவற்துறைக் குழுக்கள்

வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவாக் குழுவின் உறுப்பினர்களை கைது செய்வதற்காக மூன்று காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. காவற்துறை திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 

சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் இந்த குழுவினர் நடமாடுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.உந்துருளியில் சென்று வாள்வீச்சு நடத்தும் சமுகவிரோத செயற்பாடுகளை இந்த குழு மேற்கொள்கிறது. 

அண்மையில் சுன்னாகத்தில் வைத்து காவற்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்கும் இந்த குழு உரிமை கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதேவேளை, வடமாகாணத்தின் அனைத்து காவற்துறை சிரேஷ்ட்ட அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன..காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் பணிப்பின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் வைத்து காவற்துறை அதிகாரி ஒருவர் மீது போத்தலால் தாக்கியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டவர் இந்த மாதம் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.