Breaking News

பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது! - கூட்டமைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்ப டஉள்ளமை தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்புதெரிவித்துள்ளது.


இன்று நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில்,பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம்விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் ஒழிக்கப்பட்டுபயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு,புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து மதஅலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.