Breaking News

கிளி-யூனியன்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி – யூனியன்குளம் பிரதேசத்தில் அழுகிய நிலையில்  சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.


கிளிநொச்சி - யூனியன்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இன்று காலை விறகுவெட்டச் சென்றோர் அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதைக் கண்ட நிலையில், பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், அது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.