உருத்திரபுரத்தில் எலும்புக் கூடு மீட்பு
நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
எலும்பு கூடு மீட்க்கப்பட்ட இடம் பற்றை காடாக காணப்படுவதாகவும் அங்கு ஆள்நடமாட்டம் இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் சடலம் உருக்குலைந்து எலும்பு கூடாக காணப்படுகின்றமையால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியாதுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.








