யாழ்.பல்கலை மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஜேர்மனில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஜேர்மனில் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை இந்த கவனயீர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
படுகொலை என்பதை மூடிமறைத்து விபத்தென காட்ட முற்பட்ட பொலிஸாரிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளையும் ஒன்றிணையுமாறு தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.








