மேத்யூ சூறாவளி : ஃபுளோரிடா மாகாணத்தில் மக்கள் வெளியேற்றம்
அமெரிக்கவின் ஃபுளோரிடா மாகாணத்தை மேத்யூ சூறாவளி தாக்கும் பட்சத்தில் அதன் சேதங்கள் பேரழிவு ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்று அம்மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை அங்கு நடைபெற்றிடாத மிகப்பெரிய வெளியேற்ற பணிக்கு மக்கள் தயாராகும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஃபுளோரிடா மற்றும் தெற்கு கரோலினாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி கடற்கரைப் பகுதிகளை விட்டு செல்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.Image copyrightGETTY IMAGES
பஹாமஸ் பகுதியிலிருந்து மேத்யூ சூறாவளி கடுமையாக வீசி வருகிறது.
ஏற்கெனவே, பஹாமஸில் அனைத்து வான் மற்றும் கடல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேத்யூ சூறாவளி ஏற்கனவே ஹேய்ட்டி மற்றும் கியூபாவை தாக்கியுள்ளது.
ஹேய்ட்டியில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிறைய அடிப்படை கட்டுமானங்கள் சேதமடைந்துள்ள நிலையில், சேதக் கணக்கை எடுக்க தொண்டு நிறுவனங்கள் திணறி வருகின்றன.
வரும் ஞாயிறன்று ஹேய்ட்டியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.