Breaking News

'எழுக தமிழ்' -அச்சமும் அச்சுறுத்தலும்- சிறி­தரன்

வடக்கில் மட்­டு­மல்ல, நாட­ளா­விய ரீதியில்,
'எழுக தமிழ்' - எழுச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள தைக் காண முடி­கின்­றது.
வடக்கில் தமிழ் மக்கள் தமது நீண்ட நாளைய தேவைகள், கோரிக்­கை­க­ளுக்­காக ''எழுக தமிழ்'' மூலம் எழுச்சி பெற்­றி­ருந்­தார்கள்.

ஆனால் ''எழுக தமிழ்'' என்ற மகு­டத் தைக் கண்டு இன­வாத விஷத்தைக் கக்­கு­வ­தற்­காக நாட்டின் தென்­ப­குதி இன­வாத, மத­வாத சக்­தி­களும் அர­சி­யல்­வா­தி­களும் எழுச்சி கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் உண்­மை­யான அர­சியல் நிலைமை என்ன, அங்கு உண்­மையில் என்ன நடக்­கின்­றது என்­பதை, நிதா­ன­மாகச் சிந்­திப்­ப­தற்கு அவர்கள் தயா­ராக இல்லை. அது­மட்­டு­மல்ல. அவ்­வாறு நிதா­ன­மாகச் சிந்­திக்­கவோ செயற்­ப­டவோ அவர்­க­ளுக்கு விரு ப்­பமும் இல்லை என்­ப­தையே எழுக தமிழ் குறித்து தென்­ப­கு­தியைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள், அமைச்­சர்கள் என பல­ த­ரப்­பட்­ட­வர்­களும் வெளி­யி­டு­கின்ற கருத்­துக்­களில் இருந்து தெரிந்து கொள்ள முடி­கின்­றது.

வடக்கில் யாழ். நகர வீதி­களில் அணி திரண்ட மக்கள் தமது நீண்ட நாள் கோரிக்­கை­க­ளுக்­காகக் குரல் எழுப்­பி­னார்கள். இந்தக் குரல்கள் அவர்­க­ளு­டைய நீண்ட நாளைய அபி­லா­சை­க­ளைப் ­பற்­றி­யது. அவர்­க­ளது நீண்ட நாளைய உரி­மை­க­ளைப்­பற்­றி­யது.
இந்தப் பேர­ணியில் அவர்கள் புதி­தாக எத­னையும் கேட்­க­வில்லை. சிங்­கள மக்­க­ளையோ அல்­லது முஸ்லிம் மக்­க­ளையோ நோக்கி அவர்கள் இன­வாத நோக்கில் கோஷங்கள் எத­னையும் எழுப்­ப­வில்லை.

''எழுக தமிழ்'' பேர­ணியில் மட்­டு­மல்ல, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட போதிலும் சரி, அதற்கு முன்­னரும் சரி பேரி­ன­வா­தி­க­ளினால், பேரின அர­சி­யல்­வா­தி­களின் மேலாண்மை நட­வ­டிக்­கை­களின் மூலம் அடக்கி ஒடுக்­கப்­பட்ட போதெல்லாம் அவர்கள் தமக்­காக மட்­டுமே, தங்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­காக மட்­டுமே குரல் எழுப்­பி­னார்கள். இன­வாத நோக்­கத்தில் அவர்கள் கருத்­துக்­களை முன்­வைத்­தது கிடை­யாது. இன­வா­தி­க­ளாக, இன­வெ­றி­யர்­க­ளாக தமிழ் மக்­களோ அவர்­க ளின் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டி­ய­வர்­களோ நடந்து கொள்­ள­வில்லை என்­பது கவனத் திற் கொள்­ளப்­பட வேண்டும்.

வர­லாற்று ரீதி­யாகத் தாங்கள் வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு தாயகப் பிர­தே­சத் தில் சுய உரி­மை­க­ளுடன் தங்­க­ளு­டைய நிர்­வாகச் செயற்­பா­டு­களைத் தாங்­களே மேற்­கொண்டு சுதந்­தி­ர­மாக வாழ வழி­செய்ய வேண்டும் என்­ப­தற்­கா­கவே தமிழ் மக்­களும் அவர்­களின் அர­சியல் தலை­வர்­களும் போராடி வந்­துள்­ளார்கள். அந்தப் போராட்­டமே இப்­போதும் தொடர்ந்து நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இந்த நிலை­யி­லேயே, தமிழ் மக்­களின் வடக்கு கிழக்கு தாயகப் பிர­தேச நிலைப்­பாட்­டையும், கொள்­கை­யையும், கோரிக்­கை­யையும் இல்­லாமற் செய்­வ­தற்­கா­கவே, சிங்­கள மக்­களைப் பல­வந்­த­மாக இந்தப் பகு­தி­களில் அரச தரப்­பினர் குடி­யேற்றி வந்­தார்கள். அர­சியல் உள்­நோக்கம் கொண்ட சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளி­னா­லேயே அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் தமிழ் மக்­களின் குடிப்­ப­ரம்பல் ஒடுக்­கப்­பட்டு சிங்­கள மக்கள் குடி­சன எண்­ணிக்­கை­யிலும், வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கை­யிலும் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இதே­போன்­ற­தொரு நிலை­மையை வவு­னியா மற்றும் முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் உரு­வாக்­கு­வ­தற்­கான சிங்­களக் குடி­யேற்­றங்­களும், இரா­ணுவ குடும்­பங்­க­ளுக்­கான இரா­ணுவ குடி­யி­ருப்­புக்­களும் மேற்­கொள் ­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த வரி­சை­யி­லேயே யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின் னர், புத்தர் சிலை­களும் பௌத்த விஹா­ரை­களும் அத்­து­மீ­றிய வகையில் தமிழர் பிர­தே­சங்­களில் நிறு­வப்­ப­டு­கின்­றன.அதுவும் பௌத்த மதத்தைப் பின்­பற்­று­ கின்ற பொது­மக்கள் இல்­லாத இடங்­க ளில் அவைகள் அமைக்­கப்­ப­டு­கின்­றன என்­பதே இங்­குள்ள முக்­கிய குற்­றச்­சாட் ­டாகும்.

மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்பு 

மத ரீதி­யான இந்த ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைக்கே வடக்கில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தமிழ் மக்கள் மீதான மத, கலை, கலா­சார ரீதி­யி­லான ஒடுக்­கு­மு­றை­யாக அமைந்­தி­ருப்­பதே இந்த எதிர்ப்­புக்கு முக்­கிய கார­ண­மாகும். தமிழர் பிர­தே­சங்­களில் புத்தர் சிலை­களும், பௌத்த விஹா­ரை­களும் இருக்­கவே கூடாது என்ற நிலைப்­பாட்டை, தமிழ் மக்கள் கொண்­டி­ருக்­க­வில்லை.

தமிழர் பிர­தே­சங்­களில் புத்தர் சிலை­களும், பௌத்த விஹா­ரை­களும் இருக்கக் கூடாது என்ற நிலைப்­பாட்டைத் தமிழ் மக்­களோ அல்­லது விடு­த­லைப்­பு­லி­களோ கொண்­டி­ருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகிய நக­ரங்­களின் மத்­தியில் உள்ள பௌத்த விஹா­ரை­களும், நயினா தீவின் நாக விஹா­ரை­ யை­யும்­கூ­ட ­இ­ருந்­தி­ருக்­க­ மாட்­டாது. புத் தர் சிலை­க­ளையும் விட்­டு­வைத்­தி­ருந்­தி­ருக்க மாட்­டார்கள்.

அதே­போன்று வட­ப­கு­தியின் ஏனைய இடங்­க­ளிலும் காணப்­பட்ட – காணப்­ப­டு­கின்ற புத்தர் சிலை­களும் சிறிய மற் றும் பெரிய பௌத்த விஹா­ரை­க­ளும்­கூட மிஞ்­சி­யி­ருந்­தி­ருக்க மாட்­டாது. யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் விடு­த­லைப்­பு­லிகள் வடக்கில் பல பிர­தே­சங்­களைத் தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த காலப்­ப­கு­தியில் இவற்றை அவர்கள் இல்­லாமற் செய்­தி­ருக்க முடியும். ஆனால் அவ்­வா­றான சம்­ப­வங்கள் அங்கு இடம்­பெ­ற­வில்லை.

மாறாக, விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட பிர­தே­ச­ங்­களில் இந்து ஆல­யங்­களும், கத்­தோ­லிக்க, கிறிஸ்­தவ ஆல­யங்கள் அடித்து நொறுக்­கப்­பட்­டி­ருந்­தன. குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கும் விமானக் குண்டு வீச்­சுக்­க­ளுக்கும் இலக்­காக்­கப்­பட்­டி­ருந்­தன. இதற்­கென யுத்த மோதல் காலத்தில் தனி­யான வர­லாறே இருக்­கின்­றது என்றே கூற வேண்டும்.

எனவே, தமிழ் மக்­க­ளும்­ சரி அவர்­க ளின் அர­சியல் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டி­ய­வர்­க­ளும் ­சரி மத­வா­தி­க­ளாக, மத­வெறி பிடித்­த­வர்­க­ளாகச் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. அதே­போன்று இன­வா­தி­க­ளா­கவும், இன­வெ­றி­யர்­க­ளா­கவும் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை – செயற்­ப­ட­வில்லை என்ற யதார்த்­தத்தை தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள மக்­களும் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் உள்ள உண்மை நிலை­மை­களை சரி­யான முறையில் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பௌத்த மதத்தைப் பின்­பற்­று­கின்ற மக்கள் இல்­லாத இடங்­களில் புத்தர் சிலை­களை அமைப்­ப­தையும், பௌத்த விஹா­ரை­களை நிர்மாணிப்­ப­தையும் தமிழ் மக்கள் விரும்­ப­வில்லை. பௌத்த மேலா­திக்க மத­வாத அர­சியல் நோக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இந்த நட­வ­டிக்­கை­க­ளையே அவர்கள் வெறுக்­கின்­றார் கள்.

நிலை­மைகள் 

தமிழ் மக்கள் மட்­டுமே செறிந்து வாழ்­கின்ற கன­க­ரா­யன்­கு­ளத்­திலும், முருங்­க­னிலும், திருக்­கே­தீஸ்­வ­ரத்­திலும் இந்து ஆலய வள­வு­க­ளுக்குள் புத்தர் சிலை­களை அமைத்­தி­ருக்­கின்­றார்கள்.

கன­க­ரா­யன்­குளம் குறி­சுட்­ட­கு­ளத்தில் ஏ9 வீதி­யோ­ரத்தில் அம்மன் கோவில் வளா­கத்தில் புத்தர் சிலை­யொன்றை அமைக்க வேண்­டிய தேவை ஏன் எழுந்­தது என்­பது எவ­ருக்­குமே தெரி­யாது. யுத்த மோதல்கள் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து சென்­றி­ருந்த அந்தப் பிர­தே­ச த்து மக்கள் மீள்­கு­டி­யேற்­றத்தில் திரும்­பி­வந்து பார்த்­த­போது, இந்த புத்தர் சிலை அமைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்டு பதை­ப­தைத்துப் போனார்கள். அது ஆக்­கி­ர­மிப் பின் அடை­யா­ள­மாக, மத ரீதி­யான -இன ரீதி­யான அச்­சு­றுத்­தலின் வடி­வ­மா­கவே அவர்­க­ளுக்குத் தோன்­றி­யது. இதனால் அவர்கள் அச்சம் கொண்­டார்கள். அம்மன் கோவில் வளா­கத்­தி­னுள்ளே புத்தர் சிலை வந்­தி­ருக்­கின்­றது. இனி என்­னென்ன ஊருக்குள் வரப்­போ­கின்­றதோ, என்­னென்ன நடக்கப் போகின்­றதோ என்று அஞ்­சி­னார்கள்.

புத்­த­பெ­ரு­மானைப் புனி­த­ராக – கட­வு­ளாக நோக்­கு­கின்ற மக்­க­ளுக்கு இவ்­வாறு இந்து மதத் தலங்­க­ளுக்குள் புகுத்­தப்­ப­டு­கின்ற புத்தர் சிலை­களைப் பார்க்­கும்­போது புத்த பெருமான் மீது அவர்கள் கொண்­டி­ருக்­கின்ற பக்தி சார்ந்த உணர்வும் பக்தி சார்ந்த மரி­யா­தையும் அற்றுப் போகின்­றது. இத்­த­கைய நிலையில் உணர்ச்சி வசப்­பட்ட ஒரு­வரோ சில­ரோதான் கன­க­ரா­யன்­கு­ளத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த புத்தர் சிலையை அடித்து நொறுக்­கி­யி­ருந்­தார்கள்.

இருள் சூழ்ந்த நேரத்தில் இடம்­பெற்­றி­ருந்த இந்தச் சம்­ப­வத்­தினால் அந்தப் பிர­தே­சத்து மக்கள் மனம் கசந்து போனார்கள். ஆக்­கி­ர­மிப்பின் அடை­யா­ள­மாக இருந்­தா­லும்­கூட, ஒரு கட­வுளின் சிலை மீது கைவைத்­தி­ருக்கக் கூடாது என்­பதே அவர்­களின் நிலைப்­பாடு. இந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே உடைக்­கப்­பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் உட­ன­டி­யாக மீண்டும் நிறு­வப்­பட வேண்டும் என்ற தமது விருப்­பத்தை அவர்கள் இந்தச் சம்­பவம் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காகச் சென்­றி­ருந்த பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தார்கள்.

அதே­போன்று அங்கு உடைக்­கப்­பட்ட புத்தர் சிலைக்குப் பதி­லாக புதிய சிலை யை வைப்­ப­தற்­கு­ரிய அனைத்து உத­வி­க­ ளையும் ஒத்­தா­சை­க­ளையும் அவர்கள் வழங்­கி­யி­ருந்­தார்கள். புதிய புத்தர் சிலையை வைப்­ப­தற்­காக கனக­ரா­யன்­கு­ளத்­திற்குச் சென்­றி­ருந்த சிங்­ கள ஜாதிக பலய என்ற அமைப்பின் செய­லாளர் அறம்­பே­பொல ரத்­த­ன­சார தேரர், அம்மன் கோவில் வளவில் பரா­ம­ரிப்­ப­தற்கோ பணிந்து வணங்கி பூஜிப்­ப­தற்கோ பௌத்­தர்கள் எவ­ருமே இல்­லாத ஓரி­டத் தில் ஒரு சூழலில் அந்த புத்தர் சிலை வைக்­கப்­பட்­டி­ருந்­ததைக் கண்டு மனம் வருந்­தி­யி­ருக்­கின்றார்.

போற்றி வணங்கி புனி­த­மாகப் பேணப்­பட வேண்­டிய புத்­தரின் வடிவம் தேவை­யற்ற ஓரி­டத்தில் தேவைகள் எதுவும் இல்­லாத ஒரு சூழலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பதை நன்கு உணர்ந்து கொண்டார். இந்த உணர்வின் வெளிப்­பா­டா­கவே, அந்த புத்தர் சிலையை, புனி­த­மான ஓரி­டத்­திற்கு, பேணிப் பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்ற ஒரு பௌத்த விஹா­ரைக்குக் கொண்டு செல்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் வவு­னியா அர­சாங்க அதி­பரின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­படும் என்று அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் மத்­தியில் தெரி­வித்­தி­ருந்தார்.

முல்­லைத்­தீவு மாவட்டம், கொக்­கிளாய் பிர­தே­சத்­திலும் இதே நிலை­மைதான். அங்கு சிங்­க­ள­வர்கள் இருக்­கின்­றார்கள். இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. நீர்­கொ­ழும்பைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட மீனவர் பரம்­ப­ரையைச் சார்ந்த கத்­தோ­லி க்க மதம் சார்ந்த சிங்­க­ள­வர்­களே அங்கு வசிக்­கின்­றார்கள். நீண்ட காலத்­திற்கு முன்பே, அவர்­களின் ஆன்­மீகத் தேவைக்­காக அங்கு ஒரு கத்­தோ­லிக்கத் தேவா­லயம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு அதில் அந்த மக்கள் தமது வழி­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

இந்த நிலை­யி­லேயே அங்­கேயும் ஒரு பௌத்த விஹாரை அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதுவும் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணியின் ஒரு பகுதி மற்றும் அரச வைத்­தி­ய­சாலை பிர­தேச சபையின் பொறு ப்பில் உள்ள ஒரு வீதியின் ஒரு­ப­குதி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய ஒரு காணி­யி­லேயே அது நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

வட­ப­கு­தியில் பரா­ம­ரித்து வணங்­கு­கின்ற பௌத்­தர்கள் எவ­ரு­மில்­லாத இடத்தில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற புத்தர் சிலைகள், பௌத்த விஹா­ரை­களின் நிலைமை இது­வா­கத்தான் இருக்­கின்­றது.

தமிழ் மக்­க­ளு­டைய இந்த விருப்பு வெறுப்­பையும் நிலைப்­பாட்­டை­யுமே தமிழ் அர­சியல் தலை­வர்கள் பிர­தி­ப­லிக்­கின்­றார்கள். தமிழ் மக்­க­ளு­டைய எண்­ணங்­க­ளுக்கும் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கும் அப்­பாற்­பட்டு அவர்கள் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லது அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவோ அல்­லது தென்­னி­லங்­கையில் உள்ள வெளிப்­ப­டை­யான இன­வாத மத­வாத கொள்கை கொண்ட அர­சியல் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவோ அவர்கள் செயற்­ப­ட­வில்லை. அவ்­வாறு அவர்கள் செயற்­பட வேண்­டிய தேவையும் இல்லை என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கோரிக்­கை­களும் கோஷங்­களும்

இரா­ணு­வமே வெளி­யேறு, வடக்கு கிழக்கை பௌத்த மய­மாக்­காதே, தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் எங்கே என்­பது போன்ற கோஷங்­களும் கோரிக்­கை­க­ளுமே எழுக தமிழ் பேர­ணியில் முக்­கிய இடம்­பெற்­றி­ருந்­தன.

வடக்கில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்ற கோரிக்கை புதிய கோரிக்கை அல்ல. இந்­திய அமை­தி­காக்கும் படை­யினர் இலங்­கையில் காலடி எடுத்து வைத்­தி­ருந்த காலத்­தி­லேயே அந்த கோரிக்கை தீவிரம் பெற்­றி­ருந்­தது.

இரா­ணுவ நெருக்­கு­வா­ரங்கள் மிக மோச­மான இருந்த முன்­னைய ஆட்சிக் காலத்­தி­லும்­கூட, இரா­ணு­வமே வெளி­யேறு என்ற கோரிக்­கையை முன்­வைத்து வட­ப­கு­தியின் பல இடங்­களில் வீதி­க­ளிலும் பொது இடங்­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஒன்­று­கூடி பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தார்கள்.

யுத்தம் முடி­வ­டைந்து மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, இரா­ணுவம் நிலை­கொண்­டி­ருந்த பொது­மக்­களின் காணி­களில் மீள்­கு­டி­யேற முடி­யாத நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இடம்­பெ­யர்ந்த குடும்­பங்கள் தமது காணி உரி­மைக்­காகக் குரல் எழுப்பி பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே எழுக தமிழ் பேர­ணி­யின்­போதும் கோரிக்­கை­களும் கோஷங்­களும் எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன. இதனை இப்­போது முழு­மை­யான இன­வாத நட­வ­டிக்­கை­யாக தென்­னி­லங்­கையைச் சேர்ந்த அர­சியல் கட்­சிகள் குறிப்­பாக பேரி­ன­வாத கட்சி சார்ந்­த­வர்கள் நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

நாட்டைப் பிரிக்­கின்ற செயற்­பாட்­டிற்­கான ஒரு முன்­னெ­டுப்­பா­கக்­கூட இதனை கருத முடியும் என்ற வகை­யிலும் கருத்­துக்கள் அவர்­களால் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. 

''எழுக தமிழ்'' பேர­ணியில் பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் கலந்து கொண்­டமை தென்­னி­லங்கை அர­சியல் கட்­சிகள் மற்றும் அர­சி­யல்­வா­­தி­களின் கண்­களில் பட­வில்லை. அந்த மக்­களின் முன்­னி­லையில் இருந்த பல்­வேறு தரப்­பி­னரும் அவர்­க­ளு­டைய கண்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ரனின் உருவம் மாத்­தி­ரமே அவர்­க­ளுக்குத் தெரிந்­தி­ருக்­கின்­றது.

போருக்குப் பிந்­திய சூழலில் தமிழ் மக்­களின் தேவைகள், அர­சியல் உணர்­வு­க­ளையே அவ­ரு­டைய உரை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. அந்த உரையில் இன­வாத கருத்­துக்­களோ அல்­லது தென்­னி­லங்கை அர­சியல் கட்­சி­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களோ சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களோ இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

இத்­த­கைய நிலையில் மாலைக்­கண்ணன் பார்த்த பார்­வை­யி­லேயே தென்­னி­லங்­கையைச் சேர்ந்த பேரின அர­சியல் தலை­வர்­களும் அமைச்­சர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களும் வட­மா­காண முத­ல­மைச்­சரின் கருத்­துக்­களை நோக்கி அதற்­கெ­தி­ராக இன­வாத மத­வாத ரீதியில் விஷத்தைக் கக்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் கேட்­ப­தெல்லாம் கிடைக்கப் போவ­தில்லை. இரா­ணுவம் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­ப­ட­மாட்­டாது. அடுத்த பிர­பா­க­ர­னாக உரு­வெ­டுக்க விக்­கினேஸ்­வரன் முயற்­சிக்­கின்றார் என்­றெல்லாம் வாய்க்கு வந்­த­ப­டி­யெல்லாம் தென்­னி­லங்­கையில் இருந்து இன­வாத குரல்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.
அது மட்­டு­மல்ல. வட­மா­காண சபை­யையே கலைத்­து­வி­டுவோம் என்ற வகையில் அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

''எழுக தமிழ்'' என்ற மகு­டமே வட­ப­குதி மக்கள் கலந்து கொண்ட பேர­ணிக்கு இன­வாத சாயம் பூசு­வ­தற்கு முக்­கிய காரணம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதே நேரத்தில் நேர­டி­யாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வகையில் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற தன்­மையைக் கருத்­திற்­கொண்ட முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து சக்­தி­மிக்­கதோர் அர­சியல் தலை­வ­ராக உரு­வா­கி­வி­டு­வாரோ என்ற அர­சியல் ரீதி­யான அச்­சமும், அவர் மீதான இன­வாத மத­வாத சேறு­பூ­ச­லுக்கும் பிர­சா­ரங்­க­ளுக்கும் கார­ண­மாக இருக்கக் கூடும் என்றும் எண்ணத் தோன்­று­கின்­றது.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற இந்தச் சந்­தர்ப்­பத்தில் தமிழ் மக்­களின் அபி­லா­சைகள் அந்தத் தீர்வில் உள்­ள­டக்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான ஓர் உத்­தி­யா­கவும் இந்த இன­வாத மத­வாத பிர­சா­ரங்­களை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அடுத்­தது என்ன......?

''எழுக தமிழ் பேர­ணியை ஒழுங்கு செய்த தமிழ் மக்கள் பேரவை இந்தப் பேரணி இத்­த­கை­ய­தொரு அர­சியல் நிலை­மையை உரு­வாக்கும் என்ற எதிர்­பார்ப்பை முன்­கூட்­டியே கொண்­டி­ருந்­தார்­களா என்­பது தெரி­ய­வில்லை. அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு மக்­களை அணி திரட்­டு­வ­தாக மட்­டுமே இருந்தால், அதற்­காக பொங்­கு­தமிழ் பாணியில் எழுச்­சியை ஏற்­ப­டுத்த முனைந்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்றே பலரும் கரு­து­கின்­றார்கள்.

பொங்­கு­தமிழ் என்­பது விடு­த­லைப்­பு­லி­களின் போராட்டச் சூழலில் மக்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த ஓர் அர­சியல் பிர­சார உத்­தி­யாகும். அது விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்­தி­லேயே அதி­க­மாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கு வெளியில் பொங்குதமிழ் நிகழ்வுகள் இடம்பெற்றபோது, வீதி நாடக அரங்கியல் கலாசாரம் சார்ந்த ஒரு செயற்பாடாவே அவைகள் நோக்கப்பட்டன.

ஆனால் எழுக தமிழ் பேரணியை அவ்வாறாக எவரும் நோக்கவில்லை. எழுக தமிழ் என தமிழை முதன்மைப்படுத்திய காரணத்தினால் அதனை இனவாத பார்வையில் நோக்குவதற்கு இனவா திகளுக்கு வசதியாகப் போய்விட்டது என்றும் கூறலாம்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களின் தேவைகள், கோரிக்கைகளையும் அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகவே ''எழுக தமிழ்'' பேரணி நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள முதலமைச்சரினால், தனது உரையின் முக்கிய பகுதிகளை அல்லது அந்த உரையின் இரத்தினச் சுருக்கத்தை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் ஆற்ற முடியாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன என்பதற்கு அப்பால், அவ்வாறு செய்யாத காரணத்தினால், முதலமைச்சர் உண்மையிலேயே தனது உரையில் என்ன கூறினார் என்பது சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள மக்கள் மற்றும் சிங்களத் தலைவர்களுக்கு சரியாகச் சென்றடையத் தவறிவிட்டது என்பதை மறுத்துரைக்க முடியாது.

கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் மத்தியில் இறங்கிய தமிழ் மக்கள் பேரவை, எழுக தமிழ் பேரணியின் மூலம் வடமாகாண முதலமைச்சரை மாத்திரம் இலக்கு வைத்து இனவாத மதவாத அரசியல் பிரசாரங்களையும், அரசியல் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டுள்ள நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த அரசியல் தீவிரவாதிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்பது தெரியவில்லை.

அந்தச் செயற்பாடுகள் பற்றிய எதிர் வினைகளும் உணர்வுகளும் பேரவையிடமிருந்து வெளிப்படவில்லை. அது மட்டுமல்ல. தமிழ் மக்கள் பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் தெரியவில்லை.


முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்