இரண்டு மூன்று வருடம் செல்ல தேவையில்லை, அரசாங்கம் எமதாகும் -மஹிந்த
நாம் ஒன்று சேர்வோம். அப்போது கூட்டு எதிர்க் கட்சி இருப்பது, கூட்டரசாங்கத்தில் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று மாலை இரத்தினபுரி நகரில் நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
பயப்படவே வேண்டாம். எம்முடனிருந்து சென்றவர்கள் மிக விரைவாக எம்முடனே வந்து சேர்ந்திடுவார்கள். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை மாற்றுவது அவ்வளவு பெரிய ஒரு விடயமல்ல. இதற்காக நாம் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.