Breaking News

இராணுவப் புரட்சி ஆபத்து உள்ளதா?

இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் கடந்த 12ஆம் திகதி
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை, பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இதன் விளை­வாக, தற்­போ­தைய கூட்­ட­ர­சாங்கம் எந்­த­ளவு காலத்­துக்கு நிலைத்து நிற்­குமோ என்ற கேள்­வியும் எழுந்­தி­ருக்­கி­றது.

ஜனா­தி­ப­தியின் கருத்து, அவரை ஆட்சி பீடத்தில் ஏற்­றிய தரப்­பு­களைக் கடும் ஏமாற்­றத்­துக்கும் உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

ராஜபக் ஷ குடும்­பத்­தினர் உள்­ளிட்ட, முன்­னைய ஆட்­சியில் இருந்­த­வர்­களை பாது­காக்க முற்­ப­டு­கி­றாரா என்ற சந்­தே­கத்தை பகி­ரங்­க­மாக எழுப்பும் நிலையை ஜனா­தி­ப­தியின் கருத்து ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஊழல், மோசடிக் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து ராஜபக் ஷ குடும்­பத்தைக் காப்­பாற்ற முயற்­சிக்­கி­றாரா என்ற கேள்வி, எழும்­பி­யுள்­ள­மை­யா­னது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரண்டு ஆண்­டு­கால செயற்­பா­டு­க­ளுக்கும் விழுந்த பேரி­டி­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

இது­வரை கட்டிக் காப்­பாற்­றப்­பட்ட பெயர் கெட்டுப் போய்­வி­டுமோ என்ற அச்­சத்தை ஜனா­தி­ப­திக்கும் அவர் சார்ந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இந்தச் சர்ச்சை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அத­னால்தான், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்­களும் அந்த உரைக்கு புதிய விளக்­கங்­களைக் கொடுக்க முனை­கின்­றனர். ஊட­கங்கள் சரி­யாக அந்த உரையைப் பதிவு செய்­ய­வில்லை என்று குற்­றம்­சாட்டத் தொடங்­கி­யுள்­ளனர்.

கோத்­தா­பய ராஜபக்க்ஷ மீது தொட­ரப்­பட்­டுள்ள விசா­ரணை தொடர்­பாக தாம் எந்தக் கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை என்றும், முன்னாள் கடற்­படை தள­ப­திகள் மீதான விசா­ரணை குறித்தே தாம் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

முன்னாள் படைத் தள­ப­தி­களின் கௌரவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்றும் அதற்­காக அவர்கள் மீதான விசா­ர­ணை­களை நடத்தக் கூடாது என்று கூற­வில்லை என்றும் குழப்­ப­மான கருத்­துக்­களை அவர் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

முப்­ப­டை­க­ளி­னதும் தள­ப­தி­யாக இருக்கும் தனக்குத் தெரி­யப்­ப­டுத்­தாமல் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டது குறித்தே தாம் விசனம் வெளி­யிட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

முன்னாள் படை அதி­கா­ரி­களின் கௌரவம் காப்­பாற்­றப்­பட வேண்டும் என்றால், ஒரு முன்னாள் இரா­ணுவ லெப்.கேர்ணல் அதி­கா­ரி­யான கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான மேஜர் ஜெனரல் பாலித பெர்­னாண்­டோ­வுக்கும், அவன்ட் கார்ட் நிறு­வனத் தலைவர் மேஜர் நிசங்க சேனா­தி­ப­திக்கும் பொருந்­தக்­கூ­டிய கருத்­துத்தான்.

அவர்­களை விட்டு விட்டு முன்னாள் கடற்­படைத் தள­ப­தி­களின் சார்பில் மாத்­திரம் ஜனா­தி­பதி கருத்து வெளி­யிட்­டி­ருக்க முடி­யாது. எனவே, கோத்­தா­பய ராஜபக் ஷவை பாது­காக்க முனை­ய­வில்லை என்ற அவ­ரது கருத்து நியா­ய­மற்­றது.

முன்னாள் படை அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்தக் கூடாது என்று கூற­வில்லை, தனக்குத் தெரி­யப்­ப­டுத்தி விட்டு விசா­ரிக்­க­வில்லை என்று ஜனா­தி­பதி ஆதங்­கப்­பட்­டி­ருப்­பதும் ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­யது. அவ்­வாறு தெரி­யப்­ப­டுத்­தி­விட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டி­ருந்தால் மாத்­திரம், முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் உள்­ளிட்ட முன்னாள் படை அதி­கா­ரி­களின் கௌரவம் பாது­காக்­கப்­பட்­டி­ருக்­குமா?

எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உரை, படை அதி­கா­ரி­க­ளி­னது கௌர­வத்தைப் பாது­காப்­ப­தற்கும் அப்­பாற்­பட்­ட­தா­கவே தோன்­று­கி­றது.

அதே­வேளை, கடந்­த­வாரம் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பின் ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்­துக்­க­ளுக்­கான அடிப்­படை இரா­ணுவப் புரட்சி தொடர்­பான அச்­சமே என்று ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன.

நல்­லாட்­சியைப் பலப்­ப­டுத்த எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களால் எரிச்­ச­ல­டையும் மஹிந்த- -கோத்­தா­பய ராஜபக் ஷ தரப்பு, இரா­ணுவப் புரட்­சியை ஏற்­ப­டுத்தும் அள­வுக்கும் செல்லக் கூடும் என்ற அச்­சத்­தையும் அவர் வெளி­யிட்டார்.

இரா­ணு­வத்­தி­னரை சிறையில் அடைப்­ப­தா­கவும், சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்குக் கொண்டு செல்லப் போவ­தா­கவும் மஹிந்த தரப்­பினர், சுமத்தி வரும் குற்­றச்­சாட்­டுகள் அர­சாங்­கத்­துக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதை ஒத்துக் கொண்­டி­ருக்­கிறார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன.

முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வாகப் பிர­சாரம் செய்­வ­தையும், பேர­ணிகள் நடத்­து­வ­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இத­னால்தான், இரா­ணுவப் புரட்­சி­யொன்­றுக்கு இட்டுச் செல்லும் ஆபத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.
ஓய்­வு­பெற்ற இரா­ணு­வத்­தினர் மத்­தியில் மாத்­தி­ர­மன்றி, இரா­ணு­வத்­துக்­குள்ளே கூட, ராஜபக் ஷவி­ன­ருக்கு ஆத­ர­வான அதி­கா­ரி­களும் படை­யி­னரும் ஏரா­ள­மாக உள்­ளனர்.

இத்­த­கை­ய­தொரு ஆபத்தைக் கருத்தில் கொண்­டுதான், இரா­ணுவ உயர்­மட்டப் பத­வி­க­ளுக்கு நிய­ம­னங்­களைச் செய்­யும்­போது வடி­கட்டல் நடை­மு­றையை அர­சாங்கம் கையாண்டு வரு­கி­றது.

தற்­போ­தைய இரா­ணுவத் தள­ப­திக்கு சேவை நீடிப்பு வழங்­கப்­பட்டு, ராஜபக் ஷவி­ன­ருக்கு ஆத­ர­வாகச் செயற்­படக் கூடிய அதி­கா­ரிகள் உயர் பத­விக்கு வந்­து­வி­டாமல் தடுக்­கப்­பட்டு இரா­ணுவக் கட்­ட­மைப்பில் இருந்து படிப்­ப­டி­யாக வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றனர்.

இந்த அர­சாங்கம் மாத்­தி­ர­மன்றி கடந்த காலத்தில் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும், 1987ஆம் ஆண்டு இரா­ணுவப் புரட்சி ஏற்­ப­டலாம் என்று அஞ்­சினார்.

2009ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது, ஜெனரல் சரத் பொன்­சே­கா­வினால் அத்­த­கை­ய­தொரு புரட்சி ஏற்­ப­டுத்­தப்­ப­டலாம் என்று இந்­தி­யா­விடம் உதவி கோரி­யி­ருந்தார்.

அதே­போன்று மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் பத­விக்கு வந்த காலத்­தி­லி­ருந்தே இரா­ணுவம் தொடர்­பாக முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன்தான் செயற்­பட்டு வரு­கி­றது. இரா­ணு­வத்­தினர் மத்­தியில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தாமல் நாசூக்­கா­கவே எல்­லா­வற்­றையும் கையாள்­கி­றது.

வடக்கில் படைக்­கு­றைப்பு, காணிகள் விடு­விப்பு போன்ற விட­யங்­களில் இரா­ணு­வத்­துடன் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­ளாமல் தான் விட­யங்­களைக் கையாள்­கி­றது.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான விசா­ர­ணைகள் விட­யத்­திலும் படை­யி­னரை விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்­ப­தையே அர­சாங்கம் திரும்பத் திரும்பக் கூறி வரு­கி­றது.

இரா­ணு­வத்­தி­னரைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், அவர்­களால் ஆட்­சிக்கு ஆபத்­தேற்­பட்டு விடக் கூடாது என்­ப­தற்­கா­கவும், அர­சாங்கம் கையாளும் இந்த உத்தி, தமிழர் தரப்­புக்கு ஏமாற்­றத்­தையும் அர­சாங்­கத்தின் மீது சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதைப் பொருட்­ப­டுத்­தாமல், இரா­ணு­வத்தை கட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தற்கே அர­சாங்கம் முன்­னு­ரிமை கொடுத்து வரு­கி­றது.

இப்­ப­டிப்­பட்ட நிலையில், இரா­ணுவப் புரட்சி ஒன்­றுக்கு இட்டுச் செல்­லலாம் என்ற அச்­சத்தில், படைத் தள­ப­திகள் மீதான விசா­ர­ணை­களை அர­சாங்­கமே தடுக்­கவோ முடக்­கவோ முனைந்தால், அது இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஊக்­கத்தைத் தான் அதி­க­ரிக்கச் செய்யும்.

அர­சாங்கம் தம்மைக் கண்டு அஞ்­சு­கி­றது என்­பதை இரா­ணுவம் கண்டு கொண்டால், இன்னும் இன்னும் அழுத்­தங்­களைக் கொடுக்கும் நிலை உரு­வாகும்.

குறிப்­பாக உயர்­பா­து­காப்பு வலய விவ­கா­ரங்கள், காணிகள் விடு­விப்பு, படைகள் குறைப்பு உள்­ளிட்ட முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களில் அர­சாங்­கத்தின் பிடி முற்­றா­கவே தளர்ந்து போகும்.

அது தமி­ழர்கள் அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள நம்­பிக்­கையை இல்­லாமல் செய்து விடும். இது அர­சாங்­கத்­துக்கு தெரி­யாத விட­ய­மாக இருக்க முடி­யாது.

ஆனாலும், அர­சாங்கம் இரா­ணு­வத்தைப் பாது­காப்­ப­தற்கே முன்­னு­ரி­மையைக் கொடுத்து வரு­கி­றது.

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் நடந்த முறை­கே­டுகள் தொடர்­பான விசா­ர­ணை­களில் மாத்­தி­ர­மன்றி, போர்க்­கால மீறல்கள் விட­யத்தில் தான் படை­யி­னரைப் பாது­காப்­பதில் அர­சாங்கம் மிகவும் உறு­தி­யாக இருக்­கி­றது.

போர்க்­கா­லத்தில் இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பாக படை­யினர் மீது எத்­த­கைய விசா­ர­ணை­க­ளையும் நடத்த விட­மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் ஒன்றில் கூறி­ய­தாகச் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இது தொடர்­பாக ஐ.நாவுக்கும், நாடு­களின் தலை­வர்­க­ளுக்கும் கடிதம் எழுதப் போவ­தாக அவர் கூறி­ய­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில், அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் கடந்­த­வாரம் தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார். இரா­ணு­வத்­தினர் செய்த குற்­றங்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும், ஆனால் தண்­டனை விதிக்­கப்­படக் கூடாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே அரசாங்கம் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இதற்குப் பெயர்தான் தண்டனையிலிருந்து தப்பிக்கும் – தப்பிக்க வைக்கும் கலாசாரம். மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உச்சத்தில் இருந்தது.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் அந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறது. அதுவும், வெளிப்படையாகவே அதனை அச்சமின்றிக் கூறுகிறது.

படையினரின் குற்றங்களை விசாரிக்க முடியும் தண்டிக்க முடியாது என்றால் எதற்காக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்? நீதி என்பது குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கானதே தவிர, குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கானது அல்ல.

தற்போதைய அரசாங்கத்தின் நீதி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதியாக இருக்கப் போகிறது என்பதைத் தான் ஜனாதிபதியின் நிலையும், ராஜித சேனாரத்னவின் கருத்தும் எடுத்துக் கூறுகின்றன.

இது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதச் சிந்தனையின் வெளிப்பாடேயாகும். அதனை மறைப்பதற்காகத்தான் இராணுவப் புரட்சி பற்றிய அச்சத்தை அரசாங்கம் காரணமாக்க முனைகிறது.

-சத்திரியன்-

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்