Breaking News

தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்? செல்­வ­ரட்னம் சிறி­தரன்

இலங்­கையில் சிறு­பான்மை இன மக்கள்
கிள்­ளுக்­கீ­ரை­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றார்கள். அது மட்­டு­மல்ல. அவர்கள் பெரும்­பான்மை இன மக்­களின் தயவில் வாழ வேண்­டிய நிலையில், இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அந்­நி­ய­ரா­கிய ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து நாடு சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாக, படிப்­ப­டி­யாக, இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அந்தச் செயற்­பாடு தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தையே இப்­போதும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

பல இனங்­களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்­கின்­றார்கள். பல மதங்­களை அவர் கள் பின்­பற்றி வரு­கின்­றார்கள். இந்த நாட்டின் 75வீதம் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றார்கள். அவர்­களில் பெரு­ம­ள­வானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளாக தமிழ் மக்­களும், முஸ்லிம் மக்­களும் அடுத்­த­டுத்த நிலை­க­ளிலும், அதற்கு அடுத்த நிலை­களில் மலேயர், பறங்­கியர் போன்ற வேறு இன மக்­களும் இங்கு வாழ்­கின்­றார்கள். ஆயினும் ஏனைய ஜன­நா­யக வழி­மு­றையைப் பின்­பற்­றி­யுள்ள நாடு­களைப் போன்று பல்­லின மக்கள், பல மொழி­க­ளையும் மதங்­க­ளையும் பின்­பற்­று­கின்ற மக்கள் வசிக்கும் நிலையில் இலங்­கையில் அர­சியல் நிலைமை காணப்­ப­ட­வில்லை.
இங்கு சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், அவற்றை, பார­பட்­ச­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே பாரம்­ப­ரி­ய­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த நிலை­மை­களில் முக்­கி­ய­மா­ன­வற்றை இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் கல்­வி­யிலும், அரச தொழில்­து­றை­க­ளிலும் வர்த்­த­கத்­திலும் சிறந்து விளங்­கி­யதை நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை. தமிழ் மக்­க­ளுடன் இணைந்து வாழ வேண்டும் என்றோ, அவர்­க­ளுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்றோ அவர்கள் எண்­ண­வில்லை. அதற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­ட­வில்லை.

மாறாக, தமிழ் மக்­களின் திறமை அவர்கள் சமூ­கத்­திலும் அர­சி­ய­லிலும், தொழில் துறை­க­ளிலும் அடைந்­தி­ருந்த உயர்ச்­சியைப் பொறாமை கண்­கொண்டு நோக்­கி­ய­தோடு, அவர்­களை அந்த நிலையில் இருந்து சரித்து வீழ்த்தி அவர்கள் வகித்த இடத்தைத் தாங்கள் கைப்­பற்ற வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே சிங்­கள மக்­களின் தலை­வர்கள் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.
அர­சியல், மதம், வர்த்­தகம், கல்வி, அர­சாங்க மற்றும் துறை­சார்ந்த தொழில்­து­றைகள் என பல வழி­க­ளிலும், தமிழ் மக்­களை எந்த வகையில் வீழ்த்­தலாம், அவர்­களை எவ்­வாறு முந்திச் செல்­லலாம் என்ற நோக்­கத்­தி­லேயே அவர்கள் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் பண்­பாட்டு ரீதி­யாக அவர்­களை எவ்­வாறு பின்­ன­டையச் செய்­யலாம் என்ற நோக்­கத்­திலும் அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­ததைப் பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் இயல்­பாகக் கொண்­டி­ருந்த திற­மை­யுடன் போட்­டி­யிட்டு தமது திற­மை­களை வளர்த்­துக்­கொள்­வ­தற்குப் பதி­லாக, சிங்­கள மக்கள் தாங்கள் பெரும்­பான்மை இன மக்கள் என்ற ரீதியில் எந்தத் துறை­யா­யினும், அதில் தங்­க­ளுக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் உரி­மை­களை உரித்­தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குறுக்கு வழியைப் பின்­பற்றி அர­சியல் தலை­வர்கள் செயற்­பட்­டார்கள்.

அதற்கு உறு­து­ணை­யாக சிங்­கள பௌத்த மதத் தலை­வர்­களும் பல்­வேறு துறை­களில் அதி­கார ரீதி­யாக அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்­த­வர்­களும் செயற்­பட்­டி­ருந்­தார்கள். இதன் கார­ண­மா­கவே, கல்வி, அரச தொழில்­வாய்ப்பு, தொழில்­துறை முயற்­சி­க­ளுக்­கான அனு­மதி போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்­களில் விகி­தா­சார நடை­மு­றையை சிங்கள ஆட்­சி­யா­ளர்கள் புகுத்­தி­னார்கள்.

விகி­தா­சா­ரத்தைப் பின்­பற்­று­வ­தற்­காக கல்­வியில் தரப்­ப­டுத்தல் முறை கொண்டு வரப்­பட்­டது. இதனால் திற­மை­சா­லி­க­ளான தமிழ் இளைஞர், யுவ­திகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறு­வதில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுக்கும், தடை­க­ளுக்கும் முகம் கொடுக்க நேரிட்­டது. பலர் உயர் கல்வி வாய்ப்பை இழந்து தமது எதிர்­கால வாழ்க்­கையை சிறப்­பாக அமைத்துக் கொள்ள முடி­யாத நிலை­மைக்கு ஆளா­கி­னார்கள்.

கல்­வியில் கொண்டு வரப்­பட்ட தரப்­ப­டுத்­தலே, தமிழ் இளைஞர், யுவ­திகள் அர­சி­யலில் ஈடு­ப­டவும், ஆயுதப் போராட்ட வழி­மு­றையில் திசை திரும்பிச் செயற்­ப­டு­வ­தற்­கு­மான வழியை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்­தது.

சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­களின் முன்­னேற்­றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பெரும்­பான்மை இனத்­த­வரின் பிடி­வாதம் நிறைந்த பேரின, இன­வாத சிந்­த­னையும் செயற்­பா­டு­க­ளுமே, சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளையும் மத உரி­மை­க­ளையும் மறுப்­ப­தற்கும், ஒறுப்­ப­தற்­கு­மான முக்­கிய கார­ணங்­க­ளா­கின.

அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­டன. மத ரீதி­யான ஒடுக்­கு­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்டு, தமிழ் மக்­களின் குறிப்­பாக இந்­துக்­களின் பிர­சித்­த­மான வணக்­கத்­த­லங்­க­ளும்­கூட சிங்­கள பௌத்­தர்­க­ளினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டன. இந்த ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பாட்டின் தொடர்ச்­சி­யா­கவே யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், குறிப்­பாக வடக்கில் பல இடங்­களில் இந்து ஆலய வள­வு­க­ளிலும் இந்து கோவில்­க­ளுக்கு அரு­கிலும் புத்தர் சிலை­களை நிறுவும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் அந்த இடங்­களில் பௌத்த விகா­ரை­களை நிர்­மா­ணிக்கும் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மன்னார் மாவட்­டத்தில் முருங்கன், திருக்­கே­தீஸ்­வரம், வவு­னியா கன­க­ரா­யன்­குளம் கிளி­நொச்­சியில் கன­காம்­பிகைக் குளம், முல்­லைத்­தீவு மாவட்டம் கொக்­கிளாய் பிர­தே­சத்­திலும், யாழ்.குடா­நாட்டில், யாழ்ப்­பாணம், நயி­னா­தீவு போன்ற பல இடங்­க­ளிலும் இவ்­வா­றாக மத ரீதி­யான அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் - ஒடுக்­கு­முறைச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

மத ரீதி­யான இந்த ஒடுக்கு முறை­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுப்­போரை இன­வா­தி­க­ளாகச் சுட்­டிக்­காட்டி, நாட்டில் இன­வா­தத்தைக் கிளப்பி அமை­தியைக் குலைக்­கின்­றார்கள், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்குத் தூபம் போடு­கின்­றார்கள் என்று தென்­னி­லங்­கையில் உள்ள இன­வாத கடும்­போக்­கா­ளர்­களும் கடும்­போக்­கு­டைய பொது­பல சேனா உள்­ளிட்ட பௌத்த மதத் தீவி­ர­வா­தி­களும் தமிழர் தரப்பின் மீது குற்­றங்­களைச் சுமத்தி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளார்கள்.

இன­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற அவர்­களே அவர்­க­ளு­டைய செயற்­பாட்­டினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சிறு­பான்­மை­யின மக்­களை நோக்கி 'நீங்­களே இன­வா­திகள், இன­வா­தத்தைத் தூண்­டு­கின்­றீர்கள்' என்று குற்றம் சாட்­டு­கின்ற விநோ­த­மான அர­சியல் போக்கை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

மொத்­தத்தில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரத்­தையே, பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பேரின சிங்­கள அர­சி­யல்­வா­திகள் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கும், ஆட்சி அதி­கா­ரத்தைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்கும் உரிய உத்­தி­யாக, அர­சியல் செயற்­பா­டாக முன்­னெ­டுத்து வந்­துள்­ளார்கள்.

இன­வா­தத்தின் அடிப்­ப­டையில் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தனால் வெடித்த யுத்தம் முடி­வ­டைந்­துள்ள போதிலும், இந்த இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் உத்­தியை அவர்கள் இன்னும் கைவிட்­ட­பா­டில்லை.

சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் பகிர்ந்­தளிக்கப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே, முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன இந்த நாட்டில் விகி­தா­­சார தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். அந்த முறை­மையின் கீழ் எந்­த­வொரு கட்­சியும் பெரும்­பான்மை அர­சியல் பலத்தைப் பெற முடி­யா­த­தொரு நிலை­மையை உரு­வாக்­கி­விட்­டுள்ளார். ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற இப்­போ­தைய அர­சாங்கம் அந்தத் தேர்தல் முறையை மாற்றி, ஒரு கலப்பு தேர்தல் முறையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது.

விகி­தா­சார தேர்தல் முறையையும் தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­யையும் கொண்ட – ஒரு கலப்பு தேர்தல் முறை­யா­னது சிறு­பான்மை இன மக்­க­ளி­னதும், சிறிய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அர­சியல் பலத்தை குறைப்­ப­தற்கு அல்­லது இல்­லாமற் செய்­வ­தற்கே வழி­வ­குக்கும் என்று அர­சியல் வட்­டா­ரங்­களில் பர­வ­லாக அச்சம் நில­வு­கின்­றது.

நாட்டில் நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்­புக்குப் பதி­லாக, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தை இல்­லாமற் செய்­வது, புதிய தேர்தல் முறை­மை­யொன்றை உரு­வாக்­கு­வது, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது என்ற மூன்று முக்­கிய கார­ணங்­களை முன்­வைத்து, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றது.

இந்த நட­வ­டிக்­கை­யும்­கூட உண்­மை­யி­லேயே சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி, அவர்­க­ளுடன் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கு­ரிய நேர்­மை­யான முயற்­சி­தானா என்ற சந்­தேகம் பல தரப்­பி­ன­ரி­டை­யேயும் எழுந்­துள்­ளது.

முதன் முறை­யாக, நாட்டின் பொது­மக்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்கி, புதிய அரசிய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்­புக்­களை உரு­வாக்­கி­ய­போது, சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் தலை­வர்­க­ளு­டைய கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று ஏனைய அர­சியல் கட்­சி­க­ளி­னது அர­சியல் கருத்­துக்­களும் கேட்­கப்­ப­ட­வில்லை. ஆனால் இப்­போது, சகல அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­புக்கள் மட்­டு­மல்­லாமல், பொது­மக்­களின் கருத்­துக்­களும் திரட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

எனவே, புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பு இந்த நாட்­டுக்கும் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக இருக்­கலாம் அல்­லது ஏற்­பு­டை­ய­தாக இல்­லாமல் இருக்­கலாம். ஆனால், அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்கி உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு என்ற ரீதியில் அதற்கு எதி­ராகக் குறை கூறவோ அல்­லது குற்றம் சுமத்­தவோ முடி­யாத ஒரு நிலைமை ஏற்­படப் போகின்­றது என்­பதை அர­சியல் ஆய்­வா­ளர்கள் எதிர்வு கூறி­யி­ருக்­கின்­றார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் போக்கு புதி­தாக உரு­வாக்­கப்­பட்­ட­போது இருந்­த­திலும் பார்க்க, படிப்­ப­டி­யாக தடம் மாறிச் செல்­வ­தா­கவே பலரும் உணர்­கின்­றார்கள். நிலை­மை­களும் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றன. முன்­னைய ஆட்­சி­யி­லும்­பார்க்க புதிய ஆட்சி சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் உளப்­பூர்­வ­மான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்று பலரும் எதிர்­பார்த்­தார்கள்.

ஆயினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்கள் செல்லச் செல்ல புதிய ஆட்சி தனது பொறுப்­புக்­களை குறிப்­பாக சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில் காலத்தை இழுத்­த­டிக்கும் போக் கைக் கடைப்­பி­டிப்­ப­தா­கவே பலரும் கரு­து­கின்­றார்கள்.

விசே­ட­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை இந்த அர­சாங்­க­மா­வது துரி­தப்­ப­டுத்தும், இரா­ணு­வத்­தினர் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள தமிழ் மக்­க­ளு­டைய காணி­களை மீளக் கைய­ளித்து, கால் நூற்­றாண்­டுக்கு மேலாக இடம்­பெ­யர்ந்­துள்ள அவர்­களின் அவல நிலைக்கு முடி­வேற்­ப­டுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது,

ஆனால் இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்கை மந்த கதி­யி­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வலி­காமம் வடக்கில் இருந்து இரா­ணு­வத்­தி­னரால் வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த கொட்­டில்கள் ஓட்­டைகள் நிறைந்த கிடுகு கூரை­களைக் கொண்ட குடி­சை­களை நேரில் பார்­வை­யிட்டு, அங்­கி­ருந்த ஒரு திண்­ணையில் அமர்ந்து அந்த மக்­களின் அவல நிலைமை குறித்து கேட்­ட­றிந்­ததன் பின்னர் ஆறு மாதங்­களில் அவர்­களை அவர்­க­ளு­டைய சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.ஆனால் அந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அதே­போன்று கடந்த வருட இறு­திப்­ப­கு­தியில் தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் என கோரி உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­திய தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர்க்­கட்சித் தலை­வரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய ஆர்.சம்­பந்தன், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன், அப்­போது சிறைச்­சாலை ஆணை­யா­ள­ராக இருந்த இப்­போ­தைய வவு­னியா அர­சாங்க அதிபர் ரோகன புஷ்­ப­கு­மார ஆகி­யோரின் ஊடாக வழங்­கிய உறு­தி­மொ­ழியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இன்னும் காணாமல் போன­வர்கள் தொடர்­பிலும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்து இருக்­கு­மிடம் தெரி­யாமல் போயுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் புதிய அர­சாங்கம் பொறுப்­பான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. மனித உரிமை மீறல் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி உறு­தி­ய­ளித்த இந்த அரசு அது தொடர்பில் ஆமை வேகத்தில் காலம் கடத்­து­கின்ற போக்­கி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது,

காணாமல்போன­வர்கள் தொடர்பில் முன்­னைய ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஜனா­தி­பதி ஆணைக்­குழு, நம்­பிக்­கை­யற்ற விதத்­தி­லான விசா­ர­ணை­க­ளையே முன்­னெ­டுத்­தி­ருந்­தது. ஆயினும் இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கின்ற ஒரு தோற்­றப்­பாட்டில், ஐ.நா.பிரே­ர­ணையில் பொறுப்பு கூறு­வ­தற்­காக அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழியை நிறை­வேற்றும் வகையில் காணாமல் போனோர் தொடர்­பி­லான செய­ல­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆயினும் அதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கருத்­துக்கள் சரி­யான முறையில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அவர்­களின் பங்­க­ளிப்பை உள்­ள­டக்கும் வகையில் அவர்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­து­வமும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று பொறுப்பு கூறும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்­கத்­துடன் தோளோடு தோள்­கொ­டுத்துச் செயற்­பட்டு வந்­துள்ள பொது அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான செயற்­பாட்­டா­ளர்­களும் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

இது போன்ற நிலை­மைகள் கார­ண­மாக, புதிய அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய மக்கள் மத்­தியில் கரைந்து கொண்­டி­ருக்­கின்­றது. யுத்­தத்தின் பின்னர் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முழு அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

முன்­னைய அர­சாங்கம் இந்த விட­யத்தில் பெய­ர­ள­வி­லேயே காரி­யங்­களை நகர்த்­தி­யது. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அவர்­க­ளு­டைய பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்­றிய போதிலும், மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களை இரா­ணுவ மயப்­ப­டுத்தி அந்த மக்­களை மேலும் மேலும் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கி­யி­ருந்­தது. ஆனால் புதிய அர­சாங்கம் இந்த நிலை­மை­களில் சிறிய அள­வி­லேயே மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இருப்­பினும் இரா­ணுவ அச்­சு­றுத்­தல்­களை இல்­லாமல் செய்யும் வகையில் அவர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்கோ அல்­லது இரா­ணுவ முகாம்­களைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையோ புதிய அர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மான முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை.

இதனால், இந்த அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்­கத்­திற்­கான நட­வ­டிக்­கைகள் எதிர்­பார்த்த அளவில் விளை­வு­களை ஏற்­ப­டுத்தத் தவ­றி­யி­ருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்தின் மீது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை இழந்து வரு­கின்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அதே­வேளை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கை­யற்ற நிலைமை நீடித்­தி­ருப்­ப­தாக ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவர் ஏனைய இராஜதந்திரிகளைப் போல அல்லாது ஏனைய ஐ.நா. அதிகாரிகளைப் போலல்லாமல் நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றிப் பார்த்து உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார் என கூறத் தக்க வகையில் பல்வேறு தரப்பினரையும் பல இடங்களுக்கும் சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியதன் பின்பே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

எனவே, காலம் காலமாக நீடித்து வந்த சிறுபான்மை இன மக்களை அடக்கி யொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடவடிக்கைகளின் பின்னணியில் ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மறைமுகமான முறையில் மிகவும் தந்திரோபாய ரீதியில் சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பினருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளோ இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சமஷ்டி முறையை தமிழ் மக்கள் பொருத்தமான தீர்வாக விரும்பியிருக்கின்ற போதிலும், அதுபற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மறுதலையாக – முரண்பட்ட நிலைமையாகவே காணப்படுகின்றது,

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையைக் கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் கூறி வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் ஒற்றையாட்சி நிலைப்பாடும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் காணப்படுகின்ற இறுக்கமான போக்கும் சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

இதுவே சிறுபான்மை இன மக்களை இந்த அரசாங்கமும் கிள்ளுக்கீரையாகக் கருதுகின்றதோ என்ற கேள்வியை எழச் செய்திருக்கின்றது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்