Breaking News

ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூறுகிறார் கோத்தா

தொழில்சார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றி எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“தொழில்சார் அரசியல்வாதிகளின் வெற்றுப் பேச்சுகள் தீர்வுகளை வழங்குவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது டொனால்ட் ட்ரம்பிக் வெற்றிக்கு ஒரு காரணம்.

இதனை சிறிலங்கா ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.