சிறிதரனை வெட்டி ஓடிய சுமந்திரனுக்கு சிறிதரன் வழங்கிய பதிலடி(காணொளி)
இன்று 14-11-2016 திங்கள் கிளிநொச்சியில்
நடைபெற்ற அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு பிற்பகல் மூன்றுமணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு பிற்பகல் மூன்றுமணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு முற்றுமுழுதாக கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களை ஓரங்கட்டி கிளிநொச்சியிலும் மென்வலு அரசியலை நடாத்துவதற்கு திட்டமிட்ட சுமந்திரனுக்கு மறைமுகமாக சிறீதரன் வழங்கிய பதிலடியால் சுமந்திரன் தரப்புக்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டதாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வழமையாகவே தாயக பகுதிகளில் சுமந்திரனின் உரையின்போது இடையிடையே மக்கள் கேள்விகளை எழுப்புவதால் அது கிளிநொச்சியிலும் இடம்பெறலாம் என சுமந்திரன் எதிர்பார்த்தபோதும் அவ்வாறு இடம்பெற்றால் அது வழமையைவிட மோசமாக இருக்கும் என்றும் அவ்வாறு இடம்பெற்றால் அது சிறிதரன்மீது குற்றச்சாட்டு வரும் என்ற காரணத்தால் முன்கூட்டியே கலந்துகொண்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய சுமந்திரன் உரை ஆரம்பிக்க முன்னரே மக்கள் படிப்படியாக வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சுமந்திரனின் பேச்சில் மக்கள் குழப்பம் விளைவிக்கலாம் என அஞ்சியதால் வழமைபோலவே அழைக்கப்படாமலே சுமந்திரன் தனது ஆதரவாளர்களான சயந்தன்,சுகிர்தன்,அஸ்மின் ஆகியோரை அழைத்து வந்திருந்தபோதும் அவர்களுக்கு வேலைகொடுக்காமலே சுமந்திரனின் உரைக்கு முன்னதாகவே பொதுமக்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் விருந்தினர்களை அழைத்துவந்தவர்கள் மாத்திரமே சுமந்திரனின் உரைஇடம்பெறும்போது இருந்ததாகவும் அதனால் குழப்பம் வராமல் சுமந்திரன் தப்பித்தார்.
இதேவேளை மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் வடக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி என வடக்கு மாகாண சபை பற்றி விமர்சனம் செய்த போது வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்னம் உரையினை நிறுத்துமாறு கோரி குழப்ப நிலையில் மேடையினை விட்டு வெளியேற முயன்ற போது ஏற்பாட்டளர்களினால் சமரசம் செய்யப்பட்டு நிகழ்வு மீண்டும் நடத்திச் செல்லப்பட்டது.
தொடர்புடைய முன்னைய செய்தி
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்













