துப்பாக்கிப் பிரயோகம், பொலிஸ் பரிசோதகர் பலி, குருணாகலைக்கு அருகில் சம்பவம்
குருணாகல் நகருக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயங்களுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலக்க தகடு இல்லாத வாகனமொன்றை பரிசோதனை செய்ய முற்பட்ட போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.








