Breaking News

மாவீரர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அஞ்சலி



உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்காக மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை செபமாலை தலைமையில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், பெருமளவானோர் கலந்துகொண்டு மிகவும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு, மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்திலும் இன்று காலை துப்புரவு பணிகள் இடம்பெற்று ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.