முழங்காவில், கனகபுரம் துயிலுமில்லங்கள் மஞ்சள் - சிவப்பு கொடிகளால் அலங்கரிப்பு
தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த வணக்க நிகழ்வையொட்டி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.








