Breaking News

கூட்டமைப்பினை உடைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை! விக்கி(காணொளி)


ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

கூட்டமைப்பினை உடைப்பது எனது நோக்கமல்ல.என்னால் தமிழ்கூட்டமைப்பின் ஒற்றுமையினை சீர்குலைப்பதாக சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இது சில தனிப்பட்டவர்களின் கருத்தாக இருக்கலாம்.பல்லாயிரம் மக்களின் எதிர்பார்ப்பொன்றே என்னை இந்த பதவியில் வைத்துள்ளது.எனக்கு பதவிகள் பெரிதல்ல.

சம்பந்தன் அரசியலுக்குள் என்னை அழைக்க முன்னரே ஒரு நாள் வித்தியாதரன் என் கொழும்பு வீட்டுக்கு வந்தார். முதலமைச்சர் பதவிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தான் வர இருப்பதாகவும் என்னுடைய ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
“நான் என்ன அரசியல்வாதியா?” என்று கேட்டேன். “இல்லை. உங்களுக்குத் தமிழ் மக்களிடையே ஆதரவு உண்டு. நீங்கள் சொன்னால் கேட்பார்கள்” என்றார். காமராஜர் சொன்னது போல் “ஆகட்டும் பார்க்கலாம்” என்று சொல்லாமல் “சரி பார்ப்போம்” என்றேன்.

அவர் எதிர்பார்த்த பதவி ஏதோ வகையில் என் மடியில் வந்து விழுந்தமை அவரை மனதாரப் பாதித்திருக்கும் என்று நான் எண்ணிய போதெல்லாம் எனக்குள் ஒரு வித குற்ற உணர்ச்சியை அது ஏற்படுத்தியது. அந்தக் குற்ற உணர்வைப் போக்க இதுதான் சந்தர்ப்பம் என்று அவர் கேட்ட உடனேயே “சரி” என்று விட்டேன்.

தம்பி மாவையைக் காணும் போதுந்தான் இந்த மனோநிலை என்னைப் பீடிக்கும். அப்பொழுதெல்லாம் இதற்கான பாவம் அண்ணன் சம்பந்தரையே சாரும் என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்!

எந்த மனோநிலையில் அண்ணன் சம்பந்தன் கோரிக்கையை ஏற்று அரசியலில் இறங்கினேனோ அதே மனோநிலையில் தான் இன்றும் இருக்கின்றேன்.


ஊடகங்கள் கைகொள்ளவேண்டிய சில நடைமுறைகள் பற்றியும் அவர்தனது நீண்ட உரையில் தெரிவித்தார். சில ஊடகங்களாலேயே தனது உயிருக்கு அச்சுறுத்தல் வரும் நிலை உருவானதாக குற்றம்சாட்டினார்.

காலையில் உதயம் வரும் முன்னே காலைக்கதிர் முன்னுக்கு வரும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்