Breaking News

வட மாகாண சபையின் வரவு – செலவுத் திட்ட விவாதம் 14 ஆம் திகதி



வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அடுத்த நிதியாண்டுக்கான நிதிக் கூற்று அறிக்கை வடக்கு மாகாண நிதி அமைச்சரும் முதலமைச் சருமான சி.வி.விக்னேஸ்வர னால் கடந்த மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் மீதான விவாதமே எதிர் வரும் 14 ஆம், 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

வடக்கு அரசின் ஆளுநர் செயலகம், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, தலைமைச் செயலாளர் அலுவலகம், வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண கல்வி அமைச்சு, வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் மீது தனித்தனியே விவாதம் இடம் பெறவுள்ளது.