Breaking News

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா இன்று



கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா இன்று இடம்பெறவுள்ளது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் தலைமையில் காலை 8.30 க்கு விசேட கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலய திறப்பு விழா இடம்பெறவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிய ஆலயம் ஸ்ரீலங்கா கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.

ஆலய நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதிய ஆலய திறப்பு விழா இடம்பெறவிருந்தது.

எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து ஆலய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு ஆலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஆலய திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர் பொது மக்கள், பங்கேற்றவுள்ள நிலையில் அவர்களுக்கான விசேட படகு சேவையை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, இரோமேஸ்வரத்திலிருந்து 82 மீனவர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.