யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்தது
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்ததினால் பல மணி நேரம் யாழில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
யாழ். பண்ணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கோபுரம் இன்று (திங்கட்கிழமை) உடைந்து விழுந்ததினால் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைத் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோபுரத்தினை திருத்தும் பணியில் ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். கோபுரம் சாய்ந்து விழுந்ததினால் பண்ணைப் பாதையூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.