முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விதிசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லை நகரில் இந்த சிலை அமைக்க வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும் முன்வைப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.