Breaking News

ஜனவரி 6 இல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்



தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்டம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் ஆறாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. கொழும்பில் அமைந்­துள்ள எதிர்க்­கட்­சித்­த­லை­வரின் காரி­யா­ல­யத்தில் மாலை 4.30 மணிக்கு இக் கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் நடை­பெறும் கூட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள், செய­லா­ளர்கள் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பங்­கேற்­க­வுள்­ளனர். 

முன்­ன­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்டம் மாத­மொ­ரு­முறை நடை­பெ­று­வ­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் அவ்­வா­றான நடை­முறை பின்­ன­பற்­ற­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு அவ­சர கடி­த­மொன்றை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே குறித்த கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மேலும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 8ஆம் திகதி கூட்­ட­மைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னதாக இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.