வடக்கிலுள்ள இராணுவத்தை மீளப்பெறாமல் மத்திய அரசாங்கம் செய்யும் சேவைகள் பயனற்றது: சி.வி - THAMILKINGDOM வடக்கிலுள்ள இராணுவத்தை மீளப்பெறாமல் மத்திய அரசாங்கம் செய்யும் சேவைகள் பயனற்றது: சி.வி - THAMILKINGDOM
 • Latest News

  வடக்கிலுள்ள இராணுவத்தை மீளப்பெறாமல் மத்திய அரசாங்கம் செய்யும் சேவைகள் பயனற்றது: சி.வி  வடக்கு மக்களின் பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும், தமிழ் மக்களுக்கான உரித்துக்களை தராமல், வடக்கில் முகாமிட்டுள்ள 150 ஆயிரம் ராணுவத்தினரை மீளப் பெறாமல் மக்கள் சேவையில் ஈடுபடுவதானது மக்களை விலைகொடுத்து வாங்குவதாகவே அமையுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

  அத்தோடு, கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை சற்று புலப்படுகின்றதென தெரிவித்த விக்னேஸ்வரன்,எனினும் இந்த அரசாங்கமும் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வை தராது விட்டுவிடுமோ என்ற ஐயம் காணப்படுகின்றதென மேலும் தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வடக்கிலுள்ள இராணுவத்தை மீளப்பெறாமல் மத்திய அரசாங்கம் செய்யும் சேவைகள் பயனற்றது: சி.வி Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top