அனுராதபுரம் சிறைச்சாலைக்கு செல்வம் அடைக்கலநாதன் விஜயம்
தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்துள்ள அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை(14) விஜயம் செய்தள்ளனர்.
தைத்திருநாளை முன்னிட்டு அவர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினருடன் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வேலாயுதம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவருமான பொன்.காந்தன் முன்னாள் பிரதேச சபை உப தலைவர் சதீஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
-இதன் போது அனராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர்.