Breaking News

ஹாங்காங்கில் நடக்கவிருக்கும் T20 தொடரில் சங்காவிற்கு போட்டியாக அப்ரிடி



ஹாங்காங்கில் நடக்கப் போகும் T20 தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாங்காங்கில் எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை 5 நாட்கள் T20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 தொடரில் கேலக்ஸி கிளாடியட்டர்ஸ் அணிக்காக விளையாட குமார் சங்கக்காரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் பாகிஸ்தான் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அப்ரிடியும் இந்த தொடரில் விளையாடுகிறார். அவர் கெளலூன் காண்டூன்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.