Breaking News

முன்னாள் போராளி ஒருவர் கைது



பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னாள் போராளி கைதுகிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் காராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர்.

மறு நாள் காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.