புலிகளின் காலத்தில் எழுச்சி பெற்ற கல்வியில் வீழ்ச்சி : சிவமோகன்
முல்லைத்தீவு மாவட்டம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலப்பகுதியில் கல்வி நிலையில் உயர்வடைந்து காணப்பட்டதாகவும், 2009 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற கல்விசார் அமைப்புக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவ மாவட்ட கல்விநிலை தொடர்பிலும், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்நோக்கில் வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தலைமையில் சந்திப்பொன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்த சந்தப்பில் கலந்துகொண்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் சிலர் தரம் 9 மற்றும் 10 இல் கல்வி கற்கும் மாணவர்கள் கூட எழுத வாசிக்க தெரியாத நிலையில் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்வி நிலை வீழ்ச்சி அடைவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை மிக முக்கிய காரணியாக காணப்படுவதாக வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் இதன்போது தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முல்லைத்தீவு இருந்த காலப்பகுதியில் எழுத வாசிக்க தெரியாதாவர்கள் என மாணவர்கள் இருக்கவில்லை எனவும் குறித்த பகுதியில் உருவாகி வரும் புதிய பிரச்சனையாக இது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பெண் தலைமைத்துவ குடும்பங்களும் பல்வேறு பிரச்சனைகைள எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் வன்னிக்குறோஸ் கலாசாரபேரவை பேரவையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா செயலாளர் திருசி.வேதவனம் ஆகியோர் கலந்துகொண்டனர்.