Breaking News

உயிராபத்து காரணமாகவே பொது வேட்பாளரை அறிவிக்காதுள்ளோம்- கம்மம்பில



அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகரை தாம் முன்வைக்கவுள்ளதாகவும், அவ்வாறு முன்வைப்பதனால் அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாது போகும் என்ற அச்சம் காரணமாகவே தாமதித்து வருவதாகவும் தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

எம்மிடம் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகர் ஒருவர் தீர்மானமாகியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் அவரை நாம் வெளிப்படுத்த மாட்டோம். உலகமே பைத்தியமாகும் ஒரு பொது அபேட்சகர் எம்மிடமுள்ளார் எனவும் அவர் மேலும் கூறினார்.

நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.